“ஆத்மா(Self) மனதை விட வேகமாக செல்வது”
Self is Swifter than thought –ஈஸாவாஷ்ய உபநிஷத்
உண்மையில் மனம் என்பது ‘மனோ வேகம் வாயு வேகம் ‘என்னும் பழமொழிக்கொப்பா வாயுவை விட வேகமாக செல்லக்கூடியது. அதாவது எண்ணங்களால் ஒருவர் எங்கு வேண்டுமானாலும் கண்சிமிட்டும் நேரத்தில் செல்ல முடியும். ஆத்மா மனதைவிட வேகமாக செல்லக்கூடியது எனின் அது எங்ஙனம் சாத்தியமாகும் ?
மனம் என்னும் இடைவிடா எண்ணங்கள் தோன்ற ‘Space’ எனப்படும் ‘வெளி‘ தேவை. இஃதின்றி எவரொறுவருக்கும் எண்ணங்கள் எழவே எழாது. எண்ணங்கள் தோன்ற மூலகாரணமாக இருக்கும் ‘வெளி ‘ எனும் ‘Space’ என்பதே ஆத்ம ஸ்வரூபமாகும். இவ் ஆத்ம ஒளியில் தான் உருவமற்ற மனதின் பிரதிபலிப்பும் அம்–மனத்தின் உருவகமாக பஞ்சபூத சம்பத்துடன் கூடிய இவ்வுருவமும் காட்சிப் பொருளாகிறது.
“மனதின் கெட்டிப்பட்ட தன்மையே தேகம்” என்பது பகவான் ரமனரின் வாக்கு.
ஆழ்ந்த நித்திரையில் ‘இவ்– வெளிக்குள்‘ ஒடுங்கபெற்ற தேகத்தால் எண்ணங்களும் தோன்ற வாய்ப்பு இல்லாமல் ஒடுங்கிப்போகின்றது. கனவு மற்றும் விழிப்பு நிலையில் சர்வ வியாபியான ஆத்ம ஸ்வரூபம் எனும் ‘வெட்ட வெளி ஒளியில்‘ தான் இவ்வெண்ணங்களின் பிரதிபலிப்பும் இவ்வுருவின் வெளிப்பாடும் காணப்படுகிறது
Ramana Maharishi says: “Space is in you. The physical body is in space, but not you.”
அதாவது பரந்து விரிந்த ‘வெட்ட வெளிக்குள்‘ இருக்கும் தேகமே இது என்னும் ஞானம் ஸத்குருவின் அருளால் ஸித்திக்கின் ஈஸாவாஷ்யம் கூற்றான
“Self is Swifter than thought” (or)
“I am not the body, I am not the mind” என்னும் சகஜசமாதி பேற்றை பெறலாம்.
சாய்ராம்.


