You Are That!- “Non moving”

“ஆத்மா போக்குவரத்து அற்றது” என்பது உபநிஷத் வாக்கு.
போக்குவரத்து என்பது இருக்கு மற்றும் இல்லை என்பதிற்கு இடையில் நிகழ்வும் செயல்பாடேயாகும். இஃது இவ்வுடலுடன் மட்டுமே சம்பந்தப்பட்டது. அதாவது ஓர் இடத்தில் இருக்கும் இவ்வுடல் ‘தான்’ இல்லாத மற்றொரு இடத்தை நோக்கி நகர்வதே போக்குவரத்து எனக்கொள்ளலாம்.
எவ்வாறு பரந்து விரிந்த கடலின் மீது அதே கடல் நீரினால் தோன்றும் அலைகள் அங்கும் இங்கும் நகர்வது போல காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றதோ அது போல…
சர்வ வியாபியான “இருக்கிறது என்றே இருக்கிறது”
( I am that I am ) எனும் சப்தப் ப்ரஹ்மத்தில், பஞ்சபூத சம்பத்துடன் ‘இருக்கு இல்லை ‘ என்னும் சப்த ஜாலத்தால் உருவான இவ்வுருவமும் அங்கும் இங்குமாய், மாறி மாறி நகர்வது போன்ற ஓர் மாயத்தோற்றத்தை கொடுத்துக்கொண்டே இருக்கின்றது. அதாவது போக்குவரத்துக்குட்பட்டுது போன்ற காட்சிகளாக பூத சம்பத்துடன் கூடிய இவ்வுருவங்களின் இயக்கம் இருக்கிறது. ஆனால் வாஸ்துவத்தில் தோற்றமும் இல்லை, மாற்றமும் இல்லை. அதாவது பிறப்பு எனும் உற்பத்தியும் இல்லை எனவே இறப்பு எனும் நாசமும் இல்லை.
“எவ்வாறு வீணையின் வாசிப்பிலிருந்து வெளிவரும் ஸ்வரங்களை தனித்தனியே பிரித்தெடுக்க இயலாதோ ஆனால் வீணையின் பொது நாதத்தில் உள்ளடங்கியே இருக்குமோ அது போல, ‘ இருக்கு இல்லை ‘ என்னும் சப்த ஜாலத்தால் உருவான இவ்வுருவமும் உருவமற்ற சர்வ வியாபியான “இருக்கிறது என்றே இருக்கிறது” எனும் சப்தப் ப்ரஹ்மத்திற்கு புறம்பாக பிடிப்படாது”.
-பிரகதாரண்யக உபநிடதம்.
Ramana maharishi says:
Your duty is to be and not, to be this or that. ‘I AM THAT I AM’ sums up the whole truth; the method is summarised in ‘be still.
ஆகையால் போக்குவரத்து என்னும் நகர்வு அஞ்ஞானத்தால் தனியாக காணும் இவ்வுருவில் கற்பிக்கப்பட்ட காட்சிகளேயன்றி, ஸத்குருவின் அருள் சித்திக்கின் அஞ்ஞானம் விலக, மெய்ஞானத்தால்
“ஆத்மா போக்குவரத்து அற்றது “(“Be still and know that I am God,” )
என்னும் தன் மெய்நிலையினை உணரப்பெறலாம்.
சாய்ராம்.

Leave a comment