You Are That!-5- Existence without Identification.
What is identification?
இப்பிரபஞ்சமே சார்புத்தன்மை கொண்டதாகவே விளங்கிக்கொண்டிருக்கின்றது. இது மாறும்தன்மையுடையது, நிலையற்றது.
இப்பிரபஞ்சமே சார்புத்தன்மை கொண்டதாகவே விளங்கிக்கொண்டிருக்கின்றது. இது மாறும்தன்மையுடையது, நிலையற்றது.
எல்லா விதமான சுட்டும் தன்மைக்கும் (identification) ஆதியில் தொடக்கமாக இருப்பது “நான்”என்னும் சப்தமேயாம். இஃதின்றி எந்தவொரு சுட்டிக்காட்டுதலும் எழவே எழாது.
எனினும் அவரவர் தினந்தோறும் அனுபவிக்கும் ஆழ்ந்த நித்திரை நிலையினை ஆராய்ந்து நோக்கினால், அஃதில் “நான்” எனும் சப்தம் எழாததின் காரணம், சுட்டிக்காட்டும் தன்மையும் அங்கு மறைந்து போய்விடுகின்றது. அதாவது தன் உருவையே தான் சுட்டிக்காட்டும் தன்மை அந்நிலையில் மறைந்தது போய்விடுகின்றது.
அதாவது நான் உறங்கிக்கொண்டு இருக்கிறேன் என்று தன்னைத்தானே சுட்டிக் காட்டிக்கொள்ளும் சிந்தனையானது அவ்வுறக்க நிலையில் எவரொருவருக்கும் எழவே எழாது. ஆயினும் அவரவர்களின் இருப்பு அல்லது உணர்வு அற்றுப்போவதில்லை. இதுவே “சுட்டும் தன்மை இல்லாமல் இருக்கிறேன்” எனும் “Existence without identification” என்பது. ஆயினும் இவ்வுணர்வு ஆழ்ந்த நித்திரை நிலையில் மட்டுமே அனுபவிக்கப்படுவதால் பூரணத்துவம் பெற்றதாக கருத இயலாது.
இந்நிலை விழிப்பு நிலையில் செயல்படும் அனைத்து செயல்பாடுகளிலும், நான் செய்கிறேன் என்னும் எண்ணம் அறவே அற்று செயல்படின், விழிப்பு நிலையிலும் உறக்க நிலை போல, தன் உருவையே தான் சுட்டிக்காட்டும் தன்மை மறைந்து போய்விடும்.
பின் தூய உணர்வான இருக்கிறேன் என்பது விழிப்பு, கனவு, உறக்கம் எனும் எல்லா நிலைகளிலும் நிலைபெற்று இருக்கும். இதுவே ஜீவன் முக்தனின் நிலையும்மாகும்.
நான் எனும் சிந்தனையற்ற செயல்பாடு என்பது சாத்தியமா என்னும் கேள்வி எழுந்தால் ?
செயல்பாடு என்பது வினப்பயனைச் சார்ந்தது, வினைப்பயன் தேகத்தை பற்றியே இருப்பது. மனித குலத்தின் செயல்பாடுகள் எதுவாயினும் அது அவரவர்களின் வினைப்பயனை சார்ந்ததாகவே இருக்கும். தன்னிச்சை என்பது இதில் இல்லவே இல்லை. இத் தன்னிச்சை என்பதே நான் என்னும் சப்தமாகும்.
Ramana Maharishi says:
“அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்தாட்டுவிப்பான். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது; நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின், மௌனமாயிருக்கை நன்று.”
“அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்தாட்டுவிப்பான். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது; நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின், மௌனமாயிருக்கை நன்று.”
நன்வினைப்பயனால் இத்தகைய
மெய்ஞ்ஞானியரின் கூட்டுறவு சித்திக்கின்,
தன்னிச்சையென்னும் நான் அற்றுப்போக,
தன் உருவையே தான் சுட்டிக்காட்டும் தன்மையும் திருவருளால் மறைந்தது போய்விடுகின்றது.
மெய்ஞ்ஞானியரின் கூட்டுறவு சித்திக்கின்,
தன்னிச்சையென்னும் நான் அற்றுப்போக,
தன் உருவையே தான் சுட்டிக்காட்டும் தன்மையும் திருவருளால் மறைந்தது போய்விடுகின்றது.
Ramana Maharishi says: “Individual human beings have to suffer their karmas but Isvara manages to make the best of their karmas for His purpose.
God manipulates the fruits of karma.; He does not add or take away from it. The subconscious of man is a warehouse of good and bad karma. Isvara chooses from this warehouse what He sees will best suit the spiritual evolution at the time of each man whether pleasant or painful. Thus there is nothing arbitrary.”
அதாவது அதுவரை இருந்தது வந்த சார்புத்தன்மையுடைய நிலையற்ற நான் மறைந்து, சார்பற்ற தூயஉணர்வான மாறுபாடு இல்லாத “இருக்கிறேன்”
Existence without identification எனும்
நிலைப்பேறு திருவருளால் கிட்டும்.
Existence without identification எனும்
நிலைப்பேறு திருவருளால் கிட்டும்.
சாய்ராம்


