You Are That! – “TRUE-SELF”

Whosoever looks for the Brahman-class elsewhere than in the Self, was abandoned by the Brahman-class.
Whosoever looks for the Kshatra-class elsewhere than in the Self, was abandoned by the Kshatra-class.
Whosoever looks for the worlds elsewhere than in the Self, was abandoned by the worlds.
Whosoever looks for the Devas elsewhere than in the Self, was abandoned by the Devas.
Whosoever looks for the Vedas elsewhere than in the Self, was abandoned by the Vedas.
Whosoever looks for the creatures elsewhere than in the Self, was abandoned by the creatures.
Whosoever lookds for anything elsewhere than in the Self, was abandoned by anything.
‘This Brahman-class, this Kshatra-class, these worlds, these Devas, these Vedas, all these beings, this everything, all is that Self.

Om shanti ~shanti ~shanti hi~~

The Brihadaranyaka Upanishad (2:4:6)
What is True self ?
பார்பவனுக்கும் பார்க்கப்படும் பொருளுக்கும் இடையில் இருப்பது எதுவோ அதுவே ஆத்மா எனும் நிர்குண ப்ரஹ்மம் என்கிறது யோக வாசிஷ்டம். அது “பார்வை” எனும் சக்தி ஸ்வரூபமேயாம் !

அறிபவனுக்கும் அறியப்படும் பொருளுக்கும் இடையில் இருப்பது எதுவோ அதுவே ஆத்மா எனும் நிர்குண ப்ரஹ்மம் என்கிறது யோக வாசிஷ்டம். அது “தூயஅறிவு” எனும் சக்தி ஸ்வரூபமேயாம் !

ஒரே ப்ரஹ்ம சக்தியின் வெளிப்பாடே…
அறிவாக, பார்வையாக, கேட்க்கும் திறனாக, உள் வெளி மூச்சுக்களாக, வாக்காக, ஸ்பரிசமாகவும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. அது உருவமற்றது. ஆயினும் அனைத்து உருவங்களையும் தாங்கி நிற்பது. அழிவற்றது ஆயினும் அழியும் தன்மையுடைய அனைத்திலும் ஊடுருவி நிற்பது.

Ashtavakra Gita – Chapter: 2

As I alone give light to this body, so I do to the world, As a result the whole world is mine, or alternatively nothing is.

இஃதின்றி ஏதுமில்லை. இதுவே அனைத்துமாய் அதாவது தோற்றத்திற்கு அப்பால் உள்ள பூரணமாக, உருவமற்றதாக, அழிவற்றதாக, பரப்ப்ரஹ்மமாய்…
அதுவே மாறி மாறி தோன்றிக்கொண்டிருக்கும் , பிரபஞ்சமாகவும், பூரணமாகவும் எப்போதும் இருந்தது கொண்டிருப்பது.

எவனொருவன் பார்வை, கேட்டல், ஸ்வாசம்,வாக்கு,ஸ்பரிசம் மற்றும் தூயஅறிவுக்கு அந்நியமாக தான் இருப்பதாக கருதுகின்றானோ, அதனாலேயே அவன் தள்ளப்பட்டுவான். அதாவது இவ்வுடல் மறைந்தபின், அதனுடையே அதுவரை இருந்து பார்த்தவன், கேட்டவன், ஸ்வாசித்தவன், பேசியவன், ஸ்பரித்தவன், அறிந்தவன் என்னும் அடையாளங்களும் கூடவே மறைந்து போய்விடுகிறது.

மாறாக தன்னையறியும் ஆற்றல் கொண்டவன், தான் உருவமற்ற  ஒரே ப்ரஹ்ம சக்தியின் வெளிப்பாடான தூயஅறிவாக, பார்வையாக, கேட்க்கும் திறனாக, உள் வெளி மூச்சுக்களாக, வாக்காக, ஸ்பரிசமாக பிரகாசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவன், அழிவற்றவனாய், நித்திய ஜீவியாய், மரணமில்லாப் பெருவாழ்வினை எய்துகிறான்.

இத்தகையவர்கள் அழிவற்ற ப்ரஹ்ம சக்தியாய் எல்லா உருவங்களிலும் உருவமற்றதாய் ஊடுருவி, பூமிக்கே உப்புக்கு ஒப்பான தகுதியில் அருளை வாரி வாரி வழங்கிக்கொண்டே இருப்பார்கள். இதற்கு இதுவரை நம் கண் முன்னே வாழ்ந்து, தற்போது நம் புறக்கண்களுக்கு புலப்படாது போயினும், அருளை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கும் பாரத தேசத்து மகான்களும்…
இவ்வருளுக்கு இன்றளவும் பாத்திரமாகி வாழ்ந்து கொண்டிருக்கும் உயிர்களுமே சாட்சியாகும்.

மகான் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா உபதேசம்:
1.”இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன”
2.”என்னுடைய சமாதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்”.
3.”என்னுடைய பூத உடல் என் சமாதியிலிருந்து பேசும”
4.”என்னுடைய சமாதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் இருப்பேன”.
5.”என்னிடன் வருபவர்களுக்கும், என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும், நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்”.

திருமூலர்-திருமந்திரம்.
“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
சாய்ராம்.

Leave a comment