You Are That!- “தத்-துவம்-அஸி”

“தத்துவமஸி”
இந்துசமய வேத நூல்களில் வேதாந்தப் பொருள்களை விளக்குவதற்காகவே தொகுக்கப்பட்டிருக்கும் பிரிவுகள் உபநிடதங்கள் எனப்படும். அவைகளில் வேதத்திற் கொன்றாக நான்கு மகாவாக்கியங்கள் போற்றப்படுகின்றன. சாமவேதத்தின் மகாவாக்கியம்!
தத்-துவம்-அஸி.(तत् त्वम् असि அல்லது तत्त्वमसि) தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : இருக்கின்றாய், அல்லது ‘நீ அதுவாக இருக்கின்றாய்’ என்றும் சொல்லலாம்.
“அது” எனும் பதம் இப்பூவுலகில் தோன்றிய மானுட வர்க்கம் உள்ளிட்ட அனைத்து வகை ஜீவராசிகளையும் சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் பதம். மேலும் மானுட வர்க்கத்தில் ஆண், பெண் மற்றும் திருநங்கை எனும் எவ்வகை இனமாயினும் அஃதினை சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் பதம் “அது” என்பதாகும்.
மானுட வர்க்கத்தில் உருவாகும் காலங்களான கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர் காலம் எனும் எதுவாயினும் அஃதினை சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் பதம் “அது” என்பதாகும்.
மானுட வர்க்கத்தில் உருவாகும் உறக்கநிலை,கனவு நிலை மற்றும் விழிப்பு நிலை எனும் எதுவாயினும் அஃதினை சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் பதம் “அது” என்பதாகும்.
மானுட வர்க்கத்தில் பிறந்து பெயரிடப்படும் முன்னரும், இறந்த பின்னரும் அஃதினை சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் பதம் “அது” என்பதாகும்.
இவ் “அது” என்பது “மகான் ஸ்ரீ ஷிரடி சாய்பாபா தன் உபதேசத்தில் விளக்கியபடி பெயரும், உருவமும் அற்ற நிலையில் அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் “தூய உணர்வாய்” விளங்கிக் கொண்டிருக்கின்றது.
ஆயினும் விதிவசத்தால் மானுடனாக பிறந்த எந்த ஒருவரும் தன்னைத் தானே சுட்டிக்காட்ட, தன்னுள் “தூய உணர்வாய்” விளங்கிக்கொண்டிரும் “அது” எனும் பதத்தை பயன்படுத்துவதற்கு மாறாக ஒரு பெயரால் தன்னை சுட்டி காண்பித்துக் கொண்டு…
ஜீவன் முக்தனாகவே தான் உள்ளதை அறியாமல், மாறாக இறந்து இறந்து பிறப்பதாக தன்னை தானே கற்பித்துக்கொள்ளுதல் விந்தையிலும் விந்தையாம் !
எவனொருவன் தான் “அது” என்னும் பரமபதமாக மட்டுமே உள்ளதை உணர வல்லவனோ ! அத்தகையவனுக்கே பரமாத்மாவாகிய “அது” தன் பெருமையை சொல்லும்.
“ஆனாலும் இதன்பெருமை எவருக்கு எவர் சொல்வார்
அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும். 22.
(ஆகாரபுவனம் – சிதம்பர ரகசியம் : தாயுமான ஸ்வாமிகளின் பாடல்கள்)
“தத்துவமஸி”- நீ அதுவாக இருக்கின்றாய்.
சாய்ராம்.

Leave a comment