You Are That!- “capable man”

“கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்

எற்றா விழுமந் தரும்”

செய்யும் செயலை முடிவில் வெளிப்படும் படியாக செய்யும் தகுதியே ஆண்மையாகும், இடையில் வெளிபட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்பது இக்குறளின் பொதுப்பொருள்.

ஆண்மை என்பது ஆற்றலை தன்னுடையதாக்கிக் கொள்ளும் திறனேயாகும். இஃது ஆண், பெண் எனும் இருபாலர்க்குமே உரித்தானதாகும்.

ஒரு செயலை தொடங்குமுன் அதன் தன்மையினை முறையாக ஆராய்ந்த பின், அச்செயலின் ஆற்றல் முழுவதையும் அடையப்பெறும் விதமாகவே செயல்படுவதுதான் ஆண்மையாகும். அதன் பொருட்டு இத்தகையோர் செய்யும் செயல்பாடுகளும் அதன் ஆற்றல் வெளியாகும் தருணத்தில்தான் வெளிப்படுமேயன்றி, செயல்பாடுகளின் தொடக்கத்திலோ அல்லது இடையிடையோ அன்று. இத்தகையரீதியில் செயல்படும் ஆண், பெண் எனும் இருபாலரில் யாவராயினும் அவர்கள் ஆண்மை உடையவர்களே !

அஃதின்றி தற்பெருமை மேலோங்க, செயலின் தன்மையினை முறையாக அறியாமல், அச்செயலினை தொடங்குமுன்னரேயோ அல்லது இடையிடையையோ அனைவரும் அறியும்படி செயல்படும்போது….

இயல்பாகவே ஒன்று அச்செயல் ஆற்றல் இழந்து பயன்படாமல் போகும் அல்லது மற்றவர்களினால் அதன் தன்மை திசை திருப்பி விடப்படும். இவ்வாறு ஆற்றலை தன்னுடையதாக ஆக்கிக்கொள்ள இயலாதவர்கள் இருபாலர்களில் யாராயினும் அத்தகையோர் ஆண்மை குறைந்தவர்களே!!

என்னும் பொருள்பட இக்குறளை வள்ளுவர் உலகிற்கு அளித்துள்ளார்!!!

சாய்ராம்

Leave a comment