You Are That!- “generosity”

“குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை”.

குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொதுப்பொருள்.

இங்கு வள்ளுவர் பெருமான் குற்றம் என்று எதனை குறிப்பிடுகின்றார் ?

தவறுவது என்பது மனித இயல்பாயின் குற்றமற்ற மனிதர்களை காண்பதும் அரிதேவாம் !

எவரொருவராயினும் அவர்தம் வாழ்வினில் அறிந்தோ அறியாமலோ செய்த குற்றங்கள் எதுவாயினும் அதை பிறர் அறியாவண்ணம் மறைக்க முயற்சிக்கும் செயலையே மன்னிக்க முடியாத குற்றமாக கருதலாம். அவ்வாறு மறைக்க முயலும் அக்குற்றமே, அவரே அறியாவண்ணம் பெரும்பகையாக அவருள் உருவெடுத்து, அத்தகையவரை உருத்தெரியாமல் அழித்துவிடும். வள்ளுவர் சுட்டிக்காட்டும் குற்றம் எனப்படுவதும் இஃதேயாகும்.

இதற்கு மாறாக ஒருவர் தாம் செய்த குற்றத்தை உணர்ந்து, மனம் திருந்தி அதற்க்கு உகந்த ப்ராயசித்தமும் தேடிடின், செய்த அக்குற்றம் அவருள் பகையாக உருமாறாமல் அவர்தன்னை தற்காத்துக்கொள்ளளாம் என்பதாக இக்குறளுக்கு பொருள் கொள்ளாலாம்.

வள்ளல் அருளிய மனு முறை கண்ட வாசகம்

தற்சோதனை:
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே!
என்று வள்ளலார் பெருமானே தம்மை தற்சோதனையிட்டு
மனம் வருந்தும் பொழுது,மற்றவர்கள் எம்மாத்திரம்?

சாய்ராம்

Leave a comment