You Are That!- “talenter”

“தூக்கி வினைசெய்”

“வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு”.

ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை
இந்த உலகமும் விட்டுவிடும் என்பது பொதுப்பொருள்.

பணி அல்லது செயல் என்பது முடிவுடையதன்று ! பெரும்பாலும் தொடரக்கூடியதேயாகும் !

நற்திறன் கொண்டவர்கள் ஒரு பணியினை மேற்கொள்ளும்போது, அஃது தொடர்ந்து செயல்படும் விதமாகவே செயல்படுவார்கள்.

அதாவது இவர்கள் விட்டுச்செல்லும் அப்பணியினை இவர்களுக்குப்பின் வருபவர்கள் தொடரும்போது எவ்வித இடையூறும் இன்றி செயல்ப்படும்விதமாகவே, “தூக்கி வினைசெய்” என்னும் அவ்வையின் வாக்கிற்கேற்ப இந்-நற்திறனாளிகளின் செய்கைகள் அமைந்திருக்கும்.

அதற்கு மாறாக திறன் குறைதவர்களின் செயல்பாடோ, இப்பணியினை ஏனையோர் தொடர இயலாவண்ணமே இருக்கும். அதன்காரணம் உலகத்தவர்களால் அப்பணியானது தொடராது கைவிடப்பட்ட நிலையில் அஃது முழுமைபெறாமலேயே பயனற்றதாய் ஆகிவிடும் என்பதாக பொருள் கொள்ளலாம்.

சாய்ராம்

Leave a comment