You Are That!- “தமிழ் மொழி”

மானுடப் பிறவியும் தமிழ் மொழியும்
வெவ்வேறல்ல !
மானுடர் யாக்கையில் முதலில் உருவானது உயிரேயாகும். அதுபோல தமிழில் முதலில் தோன்றியது உயிர் எழுத்தே !.

உயிரிலிருந்து மெய்இவ்வுடம்பு உருவானதுபோல,
தமிழில் உயிர் எழுத்தை அடுத்து மெய் எழுத்தும் தோன்றியது !

உருவான மெய்யுடன்( இவ்வுடம்புடன்) உயிர் கலந்து மானுடப்பிறப்பாய் தோன்றியது போல, தமிழில் மெய் எழுத்துடன் உயிர் எழுத்தும் கலந்து உயிர்மெய் எழுத்துக்களாக தோன்றியது !

இவ்வாறு மெய்யுடன் உயிர் கலந்து உயிர்மெய் எழுத்துக்களாக தோன்றியபின், இத்தமிழுக்கு சொல் வடிவமும் எழுத்து வடிவமும்
கிட்டியதுபோல், பிறந்த ஒவ்வொரு மானுடயாக்கைகும் தமிழ் பெயரும் வடிவமும் கிட்டியது !

இதன்பின் தமிழ் வேறு. தமிழை தாய்மொழியாக கொண்ட மனிதப்பிறவி வேறு என்றில்லாமல், ஒன்றனவே என்றாயிற்று !

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகமென் றுணர். –

என்பது ஔவையாரின் நல்வழி 40

இத்தகைய

ஒன்றுசேர

ஈயப்பட்ட

கடந்தும்அதற்கு சாட்சி !

அஃதின்றி மெய்யுடன் உயிர் கலந்த தன்னை அறியப்பெறாதவர்கள்,

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே“-

என்பது திருமூலரின் திருமந்திரம்

அதாவது உயிரை வளர்க்கும் உபாயம் அறியாது உடம்மை வளர்க்கும்
உபாயத்தை மட்டுமே அறிந்தவர்கள், தமிழை தம் தாய்மொழியாக
கொண்டிருந்தாலும்

எவ்வாறு தமிழில் உள்ள மெய் எழுத்துக்கள் பதினெட்டை மட்டுமே பயன்படுத்தி எச்சொல்லையும் எவ்வெழுத்தையும் உருவாக்க இயலாதோ அவ்வாறே, தன்னை முழுமையாக அறியப்பெறாத இத்தகையோரின் தமிழினால் இவர்களுக்கும், உலகிற்கும் எப்பயனும் ஏற்ப்படாது !

தமிழ்த்தாய் வாழ்த்து:

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!”

சாய்ராம்

Leave a comment