“பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்”.
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்
என்பது பொதுப்பொருள்.
நன்மை எது ,தீமை எது என பகுத்தறியும் திறன் ஆறறிவு கொண்ட மனிதப்பிறவிக்கு மட்டுமே உள்ளது. பேதைமை என்பதிற்கு மடமை
என்று பொருள். மடமை என்பது ஆறறிவு கொண்ட மனிதப்பிறவி,
மனித உருவிலிருந்து வெளிப்படும் அறிவின் திறனை தாம் பயனுறும் வகையில் பயன்படுத்த அறியாத அறியாமையேயாகும்.
அறிவுடையவர்கள் எனப்படுவோர் தம் திறன் மட்டுமின்றி, ஏனையோரின் நல்லறிவுத்திறனையும் தமக்கு கிடைத்த ஊதியமாக, தம் கருத்தில் கொண்டே செயல் படுவார்கள்.
இதற்கு எதிர்மறையாக பேதைமை குணமுடையோர் ஏனையோரின் நல்லறிவுரைகளை உதாசீனம் செய்து, அதாவது தமக்கு கிட்டிய ஊதியத்தை விட்டுவிட்டு, தமக்கு தோன்றியதை மட்டுமே கருத்தினில் கொண்டு செயல்படுபவர்கள்….
அச் செயல்பாடுகள் கேடு விளைவிக்கும் தருணத்தில் ஏனையோரின் கருத்துக்களை மட்டுமே காரணமாக்க ! தமது அறிவை பயன்படுத்துவார்கள். இதன் காரணம் ஏனையோரின் நல் அறிவுரைகள் என்னும் ஊதியத்தை இழந்து, சமூகத்திலிருந்து தனித்து விடப்பட்ட நிலைக்கு தள்ளப்படுவதால் , தீமைகள் இத்தகையோரை அண்டியவண்ணமே இருக்கும் என்று பேதைமை என்னும் குணத்தின் கெடுதல்களை இக்குறள் மூலம் வள்ளுவர் பெருமானும், ஆத்திச்சுடி மூலம் அவ்வையும் நமக்கு வழங்கியுள்ளர்கள்.
சாய்ராம்


