You Are That!- “the ruler of fame”

“வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்”.

தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிர‌ோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே என்பது இக்குறளின் பொதுவிளக்கம்.


திறன் எனப்படுவது ஒருவர் தனக்கு எத்துனை புகழ் சேர்ந்தாலும் அப்-புகழ்ச்சிக்கு தாம் அடிமையாகமால்  ‘எல்லா புகழும் இறைவனுக்கே’  என இருத்தலேயாம். அஃதின்றி  அப்புகழ்ச்சிக்கு  அடிமையாகினின்…..


விதிவசம் அல்லது சூழ்நிலையின்  காரணமாக இத்தகையவர் கொண்ட புகழ் மங்கிப்போக  அல்லது அவரை விட்டு விலகத்தொடங்கினால், அதை தாங்கிக்கொள்ளும் மனஉறுதியின்றி    தாம் கொண்ட அப் புகழினை தம்மிடமே தக்க வைத்துக்கொள்ள தவறான பாதையை நாடிச்செல்வர். இச்-செய்கையையே காரணமாக்கி  அவர்கொண்ட  புகழும்  விலக, அவ்விடத்தை வசையும்  ஆக்கிரமிக்கும். அதாவது அதுவரை அவரை புகழ்பாடி வந்த இவ்வுலகம் தம் நிலையை மாற்றி  வசைபாடத்தொடங்கும். இவ்வாறு தாம் கொண்ட  இசையை யொழித்து வசையோடு வாழ்பவர் ‘வாழ்ந்தும் வாழாதவரே’ என்கிறார் நம் வள்ளுவர்பிரான்.


இஃதின்றி எப்புகழ்ச்சிக்கும் அடிமையாகாத திறன் உடையவர்கள் தாம் கொண்ட புகழ் தம்மை விட்டுவிலகும் சூழ்நிலை விதிவசத்தால்  ஏற்ப்படுனினும், அதை தக்க வைத்துக்கொள்ள மாற்று வழிமுறைகளை நாடாமல், மிகுந்த மனஉறுதியுடன்  தம் நிலைதிரியாமல் வாழ்வார்கள். இத்திறன் பொருட்டு இங்கு புகழ் விலகினாலும் வசையால் இவ்விடத்தை 
ஆக்கிரமிக்க இயலாது. இவ்வாறு வசையொழிந்து போனதால்  நாளடைவில் இவரை விட்டு விலகிச்சென்ற புகழ் மீண்டும் நாடிவரும்.
இவ்வாறு வசையொழிய வாழ்பவரே இசையோடும் வாழ்வார்கள் என்பதாக இக்குறளுக்கு பொருள் கொள்ளலாம்.

சாய்ராம்

Leave a comment