கேடும் நினைக்கப் படும்”.
பொறாமை என்னும் குணம் எவரொருவர் தனக்கு கிடைக்கப்பெற்ற வாழ்வை மற்றவரின் வாழ்வோடு ஒப்பிட்டு பார்கின்றரோ அக்கணமே அவர்கள் அறியாமலேயே அவருள் இக்குணம் வேரூன்ற ஆரம்பித்து விடுகின்றது. அதன் காரணம் உருவாகும் திருப்தியின்மை இத்தகையவர்களை தான் இருக்கும் நிலையைவிட மேம்பட்ட நிலையினை அடைய ஆசை கொள்ள வைக்கின்றது. அவ் ஆசை காரணம் உருவாகும் ஆக்கம் அம்மேம்பட்ட நிலையினை அடையும் வழிமுறைகள் அறத்திற்கு புறம்பாகவே இருந்தாலும் அவற்றினை புறந்தள்ள வைத்து அவரை அந்நிலையில் கொண்டு வைத்துவிடும். எனினும் இத்தகையோருக்கு அவர்தம் வாழ்வில் நிம்மதி மற்றும் திருப்தி என்பது எந்நிலையிலும் உருவாகவே உருவாகாது.
எழாததால் அழுக்காற்றின் பாதிப்பு அறவே அற்றவாராய் விளங்குவார்கள்.
மேலும் இத்தகையோருக்கு அவர்களது வாழ்வில் எத்துனை இடர்பாடுகள் ஏற்படுனினும் அவையனைத்தையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரமும் இயற்க்கையாகவே அமையும்.
இவ் இருவகை உலக இயல்பினை உலகினோர் கண்ணுற்ற போதிலும்,
அதை முறையாக ஆராய்ந்து நோக்காமல் அநேகர் மீண்டும் மீண்டும் அதே அழுக்காறு என்னும் பிடிக்குள் அகப்பட்டு சிக்கி தவிப்பதும், வெகுவெகு சிலரே அழுக்காறுக்கு ஆட்படாமல் அமைதி நிறைந்த வாழ்வினை பெற்று இன்புறுவதையும் வியப்புக்குரிய நிகழ்வாக இக்குறள் மூலம் வள்ளுவர் நமக்கு எடுத்துரைக்கின்றார்.

