உயிரினும் ஓம்பப் படும்”.
ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக்
காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும் என்பது இக்குறளின் பொதுப்பொருள்.
பொதுவாக ஒழுக்கசீலர்களாக விளங்குபவர்கள் தாங்கள் கடைப்பிடித்துவரும் ஒழுக்கம் காரணமாக தம் உயிருக்கு ஏதேனும்
பங்கம் ஏற்படுனினும் அஃதை ஒரு பொருட்டென கொள்ளாமல், ஒழுக்கமே உயர்வென கருதி வாழ்வார்கள்.
எனினும் இத்தகைய ஒழுக்கச்சீலர்களும் தங்கள்
உயிரினும் மேலானதாக கருதும் தம் உறவுகளுக்கு ஏதேனும்
தீங்கு, தாம் கொண்டுள்ள ஒழுக்க நிலைப்பாட்டின் காரணம் உருவாகும் சூழ்நிலை ஏற்ப்படின், நிலைதடுமாறவே செய்வார்கள். அத்தகைய சூழ்நிலையிலும் தாம் கொண்ட ஒழுக்கமே
உயர்வென கருதி தம் நிலையிலிருந்து பிரியாமல் வாழும் ஒழுக்கசீலர்களை காண்பது அரிதாம் என்பதாக
பொருள் கொள்ளலாம்.
இதற்கு எடுத்துக்காட்டாக :
நீதி தவறாது ஆட்சி செய்த மனுநீதிச்சோழன்…
கன்றை இழந்த பசு அடிக்கும் மணியோசை கேட்டு, அக்கன்றை கொன்றது தாம் நெடும்காலம் தவமிருந்து பெற்ற தன் மகனேயென அறிந்தும், அதற்கு எத்தனையோ மாற்று பரிகாரங்களை ஏனையோர் எடுத்துரைத்தும் !
எவ்வாறு கன்றை இழந்து தாய்பசு தவிக்கின்றதோ அத்தவிப்பை தானும் உணர்தலே சரியான தீர்ப்பாகும் எனக்கருதி
அத்தீர்ப்பையும் தானே முன்னிருந்து நிறைவேற்றி,
எச்சூழலிலும் நீதி தவறாத ஒழுக்கசீலராய் வாழ்ந்த நம்
தமிழ்ச்சோழ மன்னரின் வரலாற்றை இக்குறளின் பொருளோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
சாய்ராம்


