You Are That!- “truth teller”

“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்”.

பொதுப்பொருள்:

வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும்
தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.

பொதுவாக வாய்மை எனப்படுவது ஒருவர் தம் உள்ளம் அறிந்ததை உள்ளது உள்ளபடியே உரைத்தலேயாகும்.அவ்வாறு இருக்க இங்கு வள்ளுவர் வாய்மை என்பதை மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதலேயாகும் என்று ஏன் குறிப்பிடுகின்றார்?

எவரொருவராயினும் அவர் தம்மிடமுள்ள குறை அல்லது தவற்றினை
அறியப்பெறாமல் இருக்கும் பட்சத்தில்,அஃதினை அறிந்த மற்றவர் உள்ளது உள்ளபடியே உரைத்தாலும், அஃது அக்குறையுள்ளவர் மனதினை
காயப்படுத்துமேயாயின் அது வாய்மையாகாது. அதற்கு மாறாக
அத்தகையவர் மனதினை உறுதி பெறச்செய்யும் தீங்கு இல்லாத
சொற்களைக் சொல்லுதலே வாய்மையாகும் என்கிறார் வள்ளுவர்.

டுத்துக்காட்டாக வாய்மையை கடைபிடிக்கும் ஒரு நல்ல ஆசிரியர்
தம் மாணாக்கனின் கல்வி கற்கும் திறனில் உள்ள குறைகளை
உள்ளது உள்ளபடியே அறிந்திருந்தாலும், அதனை வெளிக்காட்டாது
அத்தகையவனை ஊக்குவிக்கும்படியே ஆசிரியரின் சொற்கள் இருக்கும்..

அதுபோல வாய்மையை கடைபிடிக்கும் ஒரு நல்ல மருத்துவராயின்
தன்னிடம் வந்த நோயாளியின் நோயின் தன்மையினை பற்றி முழுமையாக அறிந்திருதாலும், அதனை வெளிக்காட்டாது அந்நோயாளியின் மனதினை உறுதி பெறச்செய்யும் தீங்கு இல்லாத சொற்களையே சொல்லுவார் என்பதாக பொருள் கொள்ளலாம்.

சாய்ராம்

Leave a comment