“சேரிடம் அறிந்து சேர்”

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்”.
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும். என்பது இக்குறளின் பொதுப்பொருள்.
தெளிந்தான்கண் ஐயுறவும்:ஒருவர் தம் உள்ளக்கிடங்கை அடுத்தவரிடம் வெளிப்படுத்தும்போது அதை உள்ளது உள்ளபடியே மற்றவர் அறிந்திருத்தால், அவ்வறிவின்
தெளிவை அவரது கண்களே வெளிப்படுத்தும். அதனை ஆராய்ந்து அறிந்த பின்னரும், அத்தகையவரின் புரிந்துகொள்ளும் திறனில்
ஐயம் கொள்ளுதல் …

தேரான்கண் தெளிவும்:

அல்லது அதற்க்கு மாறாக தம் உள்ளக்கிடங்கை வெளிப்படுத்தியும் அதனை உள்ளது உள்ளபடி யே அறியும் திறன் இல்லாமையால் எழும் ஐயப்பாட்டினை, அவரது கண்களின் வெளிப்பாடு மூலம் ஆராய்ந்து அறிந்த பின்னரும், அத்தகையவரின் புரிந்துகொள்ளும் திறனில் மென்மேலும் நம்பிக்கை கொள்ளுதல் ….

தீரா இடும்பை தரும்:

ஆகிய இவ்விரு தவறான அணுகுமுறைகளும் அனுகுபவருக்கு நன்மை பயக்குவதிற்க்கு மாறாக தீரா துன்பத்தை கொடுக்கும். ஆகவேதான் அவ்வை பிராட்டியும் “சேரிடம் அறிந்து சேர்” என்று நமக்கு எடுத்துரைகின்றார்.

சாய்ராம்

Leave a comment