“புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்
அவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி (353)
புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய் (355)
அவைகொள விரிந்த வருட்பெருஞ் ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல்:
அந்த பரம்பொருள் எவ்வுருவு கொண்டதோ அவ்வுருவுவாகவே உள்ளது, ஏனெனின் தன்னை வெளிபடுத்திக் கொள்வதற்காக!
பிரகதாரண்யக உபநிடதம்:
புவி என்பது இம் மானுட யாக்கையை குறிக்கும் சொல்லே ! ஒவ்வொரு தேகமும் பஞ்சபூதங்களின் கலவையேயாகும். சித்-ஆகாசம் ஓர் அணுவாய் இருந்து தானே வடிவமைத்த இப்புவியினுள் புவியாகவும் அதுவே புவிநடு புவியாகவும் நடுநாயகமாய் அமர்ந்து…
அவ்- அவையினுள் மெய் ,வாய்,கண் காது,மூக்கு என்னும் ஐம்புலங்களாக தான் அமைத்த இத்- தேகத்தையும் தம் ஒளியால் ஒளிரச் செய்துகொண்டிருக்கின்றது!
Yagnavalkya said: ‘He who dwells in the earth, and within the earth’, whom the earth does not know, whose body the earth is, and who pulls (rules) the earth within, he is thy Self, the puller (ruler) within, the immortal.’
The Brihadaranyaka Upanishad:
அப்பரம்பொருளின் அருள்கூடிடின்…
எவ்வாறு பால் தயீராக உறைகின்றதோ அவ்வாறு தானே புவியுள் புவியாய் எங்கும் உறைந்து, ஒளியுறுவாய், தான் அமைத்த அவை முழுவதும் விரிந்து பொன்னுடம்பாய் நிலை பெற்றிருக்கும் என்றென்றும்!
Earth is food, the ether eats
the food. The ether rests on the earth; the earth rests on the ether. This is
the food resting on food. Taittiriyaka Upanishad
“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” !!!
சாய்ராம்.


