You Are That!- “to be afraid of death”

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்“.
பொதுப்பொருள்:
அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.
இங்கு வள்ளுவர் பயன்படுத்தியஉயிரச்சம்”  என்பது எவரொருவருக்கும் தன்னுடம்பை விட்டு தன்னுயிர் பிரியும் தருணம் இயல்பாகவே ஏற்படும் அச்சமாகும். அது போல எத்தகைய அறமற்ற  முறையில் ஒருவர் வாழ்ந்து இருப்பினும் உயிரச்சம் உருவாகும் அத்தருணத்தில் நல்லறத்தின் பொருள்திறன் தெரிந்தவராய் அதனை கடைபிடிப்பதால் கிடைக்கப்பெறும் இன்பத்தினையும் அறிந்தவராகவே வெளிபடுவர்.


எனவேதான் நல்லோர் எனப்படுபவர்கள் தங்கள் வாழ்க்கையின் இறுதியில் உருவாகக்கூடிய இவ் உயிரச்சத்தினை தங்கள் வாழ்வின் முதல்நிலையிலே முன்னிருத்திஇவ்வச்சத்தினின்று வெளிப்படும்  அறத்தினையும் அதன் மெய்பொருளையும் தெரிந்து தெளிவடைந்தவர்களாய்அதை தம் உயிர் மூச்சாக கடைபிடித்து அதன்மூலம் கிடைக்கப்பெற்ற இன்பத்தினையும் உணர்ந்தவர்களாகவே விளங்குவார்கள்.
இத்தைகையோரை இனம் கண்டறிந்து இணங்குக  என வள்ளுவர்பிரானும், அவ்வையும் நமக்கு எடுத்துரைக்கின்றார்கள்.
சாய்ராம்

Leave a comment