“எப்படி எண்ணியது என்கருத்து இங்கு எனக்கு
அப்படி அருளிய அருட்பெருஞ்ஜோதி”
-அகவல் :191
எவரொருவர்க்கு இறையருள் கூடி வருகின்றதோ,அத்தருணத்தில்
தாம் விரும்பியதை தம் எண்ணங்களில் நிலைநிறுத்தி வேண்டுதல்
என்பது இயலாததாய் போய்விடும். மாறாக இறையருளால் அங்கு
உற்றது எதுவோ அதுவே அவர் கருத்தாக,எம்முயற்சியும் இன்றி
எண்ணப்பட்டு, அதுவே அருட்பெருஞ்ஜோதியின் அருளாக
அருளப்படும்.
“அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே”.

“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி” !!!