அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி“
அகவல் -335
உலகின் உருவாக்கமும், அவ்வாறு உருவாகிய உலகினுள் ஒன்றுக்கொன்று காட்சியாய் விளங்குவதும், அருட்பெருஞ்ஜோதியின் பேராற்றலே! இவ்வாற்றலே →உருவாகிய ஒவ்வொன்றினிலும் வெளிப்படாமல், மறைந்து ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது.
அஃதினை அதனருளாலே அறிந்து, அதனை தம்முள் உணரப்பெற்ற பின், தானே உலகின் ஒளியாய் எங்கும் பரந்து, விரிந்து விளங்கி கொண்டிருக்கின்றார் அருட்ப்ரகாச வள்ளல் பெருமானார்.
1.அஷ்டாவக்ர கீதை:அத்தியாயம் 2:2
2.பைபிளில் யேசு கிறிஸ்துவும், யோவான் 8ல்,
“நானே உலகத்துக்கு ஒளி“. என்னைப் பின்பற்றி வருகிற எவனும் ஒருபோதும் இருளில் வாழமாட்டான். அவன் வாழ்வைத் தருகிற ஒளியைப் பெறுவான்” என்கிறார்.
3.Correcting oneself is correcting the whole world. The sun is simply bright. It does not correct anyone. Because it shines, the whole world is full of light. Transforming yourself is a means of giving light to the whole world.
—Ramana Maharshi
“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” !!!


