You Are That!-“Enlightened intellect”

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்“.
பொதுப்பொருள்:
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.
இங்கு வள்ளுவர்பிரான் நுண்ணிய நூல் என்று குறிப்பிடுவது, நுட்பமான மெய்ப்பொருளை தன்னுள் மறைபொருளாக கொண்ட நூல்களேயாகும்.
இத்தகைய நுண்ணிய நூல்களை பலமுறை கற்றாலும், அதனுள்ளே பொதிந்துள்ள நுட்பமான பொருள் அவ்வளவு எளிதாக வெளிப்படாது.
அதற்க்கு மாறாக கற்பவரிடம் இயல்பாகவே மிகுந்துள்ள உண்மையறிவே,
இங்கு வள்ளுவர் உண்மையறிவு என்று சுட்டிக்காண்பிப்பது Enlightened intellect என்று சொல்லப்படும் அறிவொளியால் அறிதலேயாகும். அதாவது கற்பவர் மூலம் நுண்ணிய நூலின் பொருளை தன்னுள் கிரகித்துக்கொண்ட   தூய அறிவோளியானது, அந்நூலின் சாராம்சத்தை, மெய்ப்பொருளை தன் அறிவொளியால் தானே வெளிப்படுத்துவதே  முடிவில் மிகுந்து நிற்கும். 

மேலும் வள்ளுவர் பெருமான் இக்குறளை ஊழ் என்னும் அதிகாரத்தில்  இயற்றியதன் காரணம் ?

இத்தகைய உண்மையறிவு உதிக்குமிடம் மனிதர்கள் தாங்கள் பிறந்த பிறப்பின் அடிப்படியில்  தங்களுக்குள் உருவாக்கிக்கொண்ட  ஜாதி,மதம்,குலம்,மொழி,தேசம்,பொருட்செல்வம் போன்ற பொய்மையில் அன்று !

மாறாக அவரவர்களின் விதியிலேயே உருவாகி வெளிப்படுகின்றதுஅவ்விதியினை எழுதும் ஆற்றலும் இம் மானுடப்பிறப்பு ஒன்றுக்கு மட்டுமே உண்டு என்னும் மறைபொருளை சொல்லவே ஊழ் என்னும் இவ் அதிகாரத்தை கையாண்டுள்ளார்.

மேலும் ஒரே நுண்ணிய நூலினை அநேகர் கற்றாலும், அவரவர்களின் வினைப்பயன் அளவு  அவர்களது அறிவொளியானது, கற்ற நுண்ணிய
நூலின் மெய்ப்பொருளை உண்மையறிவாய்  வெளிப்படுத்தும்.அஃது அக்கற்றவர்களிடையே கருத்து வேறுபாடு கொண்டதாகத்தான் இருக்கும்!!!


சாய்ராம்

Leave a comment