“உறவும் (பிரிவும்) பகையும்”

உறவினி லுறவும் உறவினிற் பகையும்
அறனுற வகுத்த வருட்பெருஞ்ஜோதி
ருட்பெருஞ்ஜோதிஅகவல்


தனித்து வந்த ஒருவனுக்கு, ஒருத்தி என்னும் கணவன் மனைவி உறவும்அவ்வாறு மலர்ந்த உறவினிலிருந்து விரியும் மற்றொரு உறவாக மழலை செல்வங்களும், இல்லறதருமம் என்னும் அறத்தின் அடிப்படையில் வகுத்த ருட்பெருஞ்ஜோதி !


இவ்வாறு மலர்ந்த உறவினில் எவரேனும் ஒருவர்க்கு அருள்தாகம் உண்டாகி, அருளாளர்களால் ஆட்கொள்ளப்படமற்றொருவர் அஃதினை பொருட்டெனக் கொள்ளவில்லையெனின், அதன் பொருட்டு  இல்லற உறவில் ஏற்படும்பிரிவை (பகையை), துறவற தருமம் என்னும் அறத்தின் அடிப்படையில் வகுத்த ருட்பெருஞ்ஜோதி !!

 

“உறவினி லுறவாக” வள்ளல் பெருமானை  இல்லற வாழ்வை மேற்கொள்ள வைத்ததும், உலகம் உய்யும் பொருட்டு சன்மார்க்க சங்கத்தை தோற்றுவிப்பதற்காக வள்ளல் பெருமானை “உறவினிற் பகையாக” இல்லற வாழ்வில் இருந்து பிரித்து வெளியேற்றியதும், அறத்தின் அடிப்படையில் அருட்பெருஞ்ஜோதியால் வகுக்கப்பட்டதே!!!

 “பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்

எத்தாலும் கூடி யிருக்கலாம் – சற்றேனும்

ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்

கூறாமல் சந்நியாசம் கொள்“.

என்பதும் கூட அவ்வை பிராட்டியின் அறிவுரை!

 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” !

Leave a comment