You Are That!- “Unseen, but seeing”

“காட்சியும் கானாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி”

(அகவல்:153)



‘அது அருட்பெருஞ்ஜோதி’ பார்ப்பவனின் பார்க்கும் சக்தியாக இருந்து பார்ப்பவனையும் அதன் மூலம் இவ்- உலகையும் காண வைக்கிறது. ஆயினும் அது (அருட்பெரும் ஜோதி) எதையும் காண்பதில்லை.

எவ்வாறு ஒரு முப்பட்டை கண்ணாடி (Prism) வழியே ஊடுருவும்
‘வெள்ளொளி ‘பலவிதமான வண்ணங்களில் பிரதிபலித்தாலும்
‘அது வெள்ளொளி’ எப்போதும் மாறாத தன்மை கொண்டதாகவே
இருக்கிறதோ அவ்வாறே…
பார்ப்பவனின் பார்க்கும் சக்தி வழியே பல வண்ணமயமான உலகியல் காட்சிகளை பார்ப்பவனுக்கு ‘அது’ அளித்தாலும், ‘அது அருட்பெருஞ்ஜோதி’ காட்சிகள் எதையும் கானாத தன்மை கொண்டதாகவே மாறாமல் இருந்துகொண்டிருக்கிறது.
சாய்ராம்.

Leave a comment