
என்புதோல் போர்த்த உடம்பு“.
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர் நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும்.
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே
–திருமூலர்–
அன்பு என்பது குணம் சார்ந்தது.எக்குணமும் தனித்து நிற்க இயலாது,மாறாக ஒன்றை பற்றியே நிற்கும் அதுபோல் அன்பு என்னும் குணமும் உயிர் ஒன்றால் மட்டுமே பற்றக்கூடியதாய் பற்றியே இருக்கும். அதாவது இம்மானுட தேகத்தில் குடிகொண்டுள்ள ஒவ்வொரு உயிரின் பேராற்றலும் அன்பின் வழியாக மட்டுமே வெளிப்பட இயலும். அவ் அன்பே சிவமாய் பின்,எல்லாம் சிவமாய்,எங்கும் சிவமயமாய் நிற்கும் .
உயிர்,அன்பு,சிவம் இம்மூன்றையும் ‘ஒன்றேயென உணர்பவர்கள்‘ …
தேகத்தில் குடிகொண்டுள்ள உயிர் தன் பேராற்றல் முழுவதையும் அன்பின் வழியாக வெளிப்படுத்தி, அதன் மூலம் ஏனைய அனேக உயிர்கள் பயனுரச்செய்யும்.
எம்மானுட வடிவம் தூயஅன்பும், சிவமும் இரண்டற கலந்த நிலையில் விளங்குகின்றதோ, அவ்வுடம்பில் உயிரும் என்றன்றும் நிலை பெற்றிருக்கும். அதன் காரணம் அன்பே சிவமாய் காலங்கள் பல கடந்தும் அமர்ந்திருப்பார்கள் !

இதற்கு உயிர்,அன்பு,சிவம் என்னும் இம்மூன்றையும் ஒன்றன உணர்ந்து வாழ்ந்த அருட்ப்ரகாச வள்ளலாரிடமிருந்து வெளிப்பட்ட அன்பும் அது மனிதகுலம் தாண்டி வாடிய பயிர்களுக்கும் சென்றடைந்ததும்.காலங்கள் கடந்தும் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பதும் சான்றெனக்கொள்ளலாம்.
அஃதின்றி அறிவின்மையால் அன்பு,சிவம், உயிர் இவற்றை வேறுவேறாய் எண்ணுபவர்கள், உடம்பினுள் குடிகொண்டுள்ள உயிர் தன்ஆற்றலை வெளிப்படுத்த வழிவகை ஏதும் அற்றதாகி, அடங்கியே இருக்கும்…
அதன் காரணம் அவ்வுடம்பும் அன்பற்றதாக போக, சிவமும் மங்கிப்போக, உயிரும் நிலைபெற இயலாமல் நிலையான்மையாக…
அன்பே சிவமாய் அமராத உடம்பு சவமயமாய், அதாவது இறந்த எலும்புகூட்டின் மேல் தோல் போர்த்திய உடலாக உலாவிக்கொண்டிருக்கும் என்னும் பொருள்பட வள்ளுவர் பெருமான் இக்குறளை உலகிற்கு ஈந்துள்ளார்.
சாய்ராம்

