You Are That!- “A secular being”

“சாதியும் மதமும் சமயமும் காணா

ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி”

(அகவல்:115)

சாதியின் உருவாக்கம் ஏற்படுவது, எப்போது ஒருவர் தான் இவர்களால்தான் பிறந்தோம் என்றோ அல்லது இவர்களை தாம்தான் பிறப்பித்தோம் என்றோ என எண்ணும் எண்ணத்தில் உதயமாகுவதே ஆகும்.சாதியும்,மதமும், சமயமும்(மரபுகள்) ஒன்றையொன்று பற்றியே நிற்க்கும்.

அநாதியான அருட்பெருஞ்ஜோதி பிறப்பு அல்லது தொடக்கம் என்பதே இல்லாதது. எது ஒன்றினாலும் பிறப்பிக்கப்படாதது. ஆகவே அஃ தினில் சாதி,மதம்சமயம் போன்றவைகளை காண இயலாது. அது போன்று சாதி, மதம், சமயம் போன்றவைகளை கொண்டு அச்-ஜோதியை காணவும் இயலாது.

அதாவது ஒருவர் சாதி,மதம், சமயம் போன்ற அடையாளங்களாக தன்னை காணும்வரை ஜோதி தரிசனத்தை காணவே இயலாது. எப்போது தன்னை
அடையாளம் அற்றவராக உணர்கின்றாரோ அக்கணமே
ஜோதி தரிசனம் வெளிப்படும்.
“சுட்டுதற்கு அரிதாம் சுகாதீத வெளிஎனும்

அட்டமேல் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி”

(அகவல்:73)

சாய்ராம்.

Leave a comment