You Are That!- ” Knowledge Developer”

“ஓதுவது ஒழியேல்” – ஆத்திச்சூடி-11

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு”.

பொது விளக்கம்:

மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

-இங்கு வள்ளுவர் மணற்கேணியை உவமானப் பொருளாக கையாண்டுள்ளார் !

-ஒரு கேணியை தோண்டுமுன் நீர்வளம் உள்ள பகுதி முதலில் ஆராயப்படும்.

-பின் கேணி தோண்டப்படும் பொழுது எடுத்த எடுப்பிலேயே மேற்பரப்பில் நீர் ஊறுவதில்லை.

-தோண்டிய இடத்திலேயே விடாமுயற்சியுடன் மேலும்மேலும் ஆழமாக தோண்டப்படும் பொழுது நீரானது வெளிப்பட்டு ஊறுகின்றது
-மேலும் அவ்வாறு ஊறின நீர் பயன்பாட்டிற்கு வரவில்லையெனின் அதன் தன்மை நீர்த்துப்போகும்.
“இறைக்கும் கிணறுதான் ஊரும்” என்னும் பழமொழிக்கேற்ப எந்த அளவிற்கு ஊறிய நீர் பொதுப்பயன்பாட்டிற்கு வருகின்றதோ அதைவிட பன்மடங்கு நீரும் பெருக்கெடுக்கும்.

அதுபோல கல்வி கற்க முற்படுபவர்கள் முதலில் தமக்கு பயனுள்ள கல்விதனை முறையாக தேர்ந்தெடுத்து கற்க,

“ஓதுவது ஒழியேல்” என்கின்றது ஆத்திச்சூடி அதாவது கற்ற அக்கல்விதனை ஒருமுறை கற்றதோடு நில்லாமல், அதன் உட்பொருளை மெய்பொருளாக கண்டு அறியும்வரை, சிரத்தையுடன் கற்ற அக்கல்விதனையே மென்மேலும் ஓதுமின்,

-அக்கல்விக்கேணியிலிருந்து அறிவு என்னும் நீர் ஊற்றானது கற்பவர் நெஞ்சினில் வெளிப்பட்டு பெருக்கெடுத்தோடும்.

-அவ்வறிவு பொதுப்பயன்பாட்டிற்கு வரவர அக்கல்விதனை கற்றவர் நெஞ்சினுள் மென்மேலும் அவ்வறிவும் பிரகாசித்து கொண்டேயிருக்கும்.
-அஃதின்றி வெளிப்பட்ட அவ்வறிவு பொதுப்பயன்பாட்டுக்காக வரவில்லையெனின்,

எவ்வாறு கேணியில் ஊறின நீர் பொதுப்பயன்பாட்டிற்கு வரவில்லையெனின் அதன் தன்மை நீர்த்துப்போய்விடுகின்ற்தோ,அவ்வாறே அவ்வறிவும் ஒளி குன்றிப்போய்விடும் என்பதாக பொருள்கொள்ளுதல் சாலச்சிறந்தது.

சாய்ராம்

Leave a comment