இங்கு வள்ளுவர் “தன்நெஞ் சறிவது” என்று குறிப்பிடுவது
intuitionஎன்று சொல்லப்படும் அவரவர்களின் உள்ளுணர்வே ஆகும். எவரொருவருக்கும் ஒரு செயல் செய்ய எத்தனிக்கும் பொழுது,
அச் செயல்பாடானது அவர்களின் வாய்மைக்குபங்கம் விளைவிக்குமெனில், ஒரு கணப்பொழுதுநேரம் அவர்களின் உள்ளுணர்வானது அச் செயல்பாட்டின் உண்மை நிலையினை குறித்து அறிவுறுத்தி எச்சரிக்கும்.
ஆனால் ஆசை வயப்பட்டவர்கள் இவ் உள்ளுணர்வை புறம்தள்ளி,
அச் செயல் வாய்மைக்கு புறம்பே இருந்தாலும் அதனை செயல்படுத்தவே முனைவார்கள். அச் செயல் பொய்த்தபின் அதன் காரணம் உருவாகும் கெடுதல்களால் சொல்லனா துயரங்களை அனுபவிக்கும் தருணம்….
தன்நெஞ்சால் தன்னை (ஆசை வயப்பட்ட அவனை) சுட்டுக்கொண்டே இருக்கும் என்னும் பொருள்படவே இக்குறளை வள்ளுவர் உலகிற்கு அளித்துள்ளார்.
“வேண்டி வினைசெயேல்” என்பது ஔவையின் ஆத்திச்சுடி.
ஆசைவயப்பட்டு வாய்மைக்கு புறம்பான தீயசெயல்களை செய்யாதே என்று ஔவைபிராட்டியும் எச்சரிக்கிறார். இதற்க்கு மாறாக வாய்மையை தன் மெய்யுனர்வாக கடைபிடிப்பவர்கள் “தன்நெஞ் சறிவது பொய்யற்க” என்று உணர்ந்து அதன்வழி நடந்து தன்னைத்தான் காத்துக்கொள்வார்கள்.


