You Are That!- “fear evil deeds”

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்“.
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும் என்பது இக்குறளின் பொதுப்பொருள்.
வள்ளுவர் இங்கு தீயினை ஏன் உவமானப்பொருளாக கையாண்டுள்ளார்.? தீயிற்கு தொலைவில் இருக்கும்போது தீயின் வெப்பம் உடலுக்கு கதகதப்பை கொடுக்கக்கூடியதாய் இனிமையுடைதாய் இருக்கும். ஆனால் அருகில் செல்லச்செல்ல அதே தீயின் வெப்பம் உடலையே சுட்டெரித்து விடும்.

தீயினைப் போன்றே  தீயசெயல்கள் யாவுமே துவக்கத்தில் நற்பயன்களை அள்ளித்தருவது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி, மாயவலையில் சிக்கவைத்துவிடும். முடிவில் அதே தீயசெயல்கள் தீய பயன்களால், அத்தீமை புரிந்தோரை உருத்தெரியாமல் அழித்துவிடும். மேலும் தீயின் வெப்பத்திலிருந்து சுட்டெரிக்காமல் தற்காத்துக்கொள்ளக்கூட உபாயம் ஏற்படலாம். ஆனால் இத் தீயபயன்களின் தாக்கத்தினின்று எவரும்  மீளவே இயலாது. அஃது அத்தீமை புரிந்தோரை சுட்டெரித்தே தீரும்.



அதாவது எந்த நற்ச்செயல்களும் துவக்கத்திலேயே  நல்ல பலன்களை  அள்ளித்தராது. மாறாக எச்செயல்கள் துவக்கத்திலேயே எம் முயற்சியுமின்றி, அச் செயல்புரிவோர்க்கு நன்மையுடையாதாய் தோன்றுகின்றதோ, அவற்றை தீயவையாக, தீயினும் மேலானதவையாக கருதி, அஞ்சி  ஒதுங்குவர் நல்லோர் எனப்படுபவர்கள் என்னும் பொருள்பட  வள்ளுவர் இக்குறளை நமக்கு வழங்கியுள்ளார்.

வள்ளல் அருளிய
மனு முறை கண்ட வாசகம் 
தற்சோதனை

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!

வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக்கொழிய வழியடைத்தேனோ
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ
என்ன பாவம் செய்தேனோ! இன்ன தென்றறியேனே

சாய்ராம்

Leave a comment