பெய்யெனப் பெய்யும் மழை.”
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.
அவ்வை பிராட்டியின் வாக்கு. ஒரு வயது வந்த ஆணும் பெண்ணும் இல்லறம் மேற்க்கொள்ளுவதே இத் தெய்வீகம் வெளிப்படத்தான் !
வள்ளுவரும், வாசுகியும் மேற்கொண்ட இல்லறமே இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்
வள்ளுவர்பிரான் தான் தெய்வப்புலவர் என்னும் நிலைக்கு உயர்ந்தது மட்டுமிலாமல், தானே “கொழுநன்“ எனப்படும் ஒரு சிறந்த கொழுக்கொம்பாக இருந்து தன் மனையாள் வாசுகி அம்மையாரிடம் விளங்கிய நற்பண்புகள், தெய்வப்பண்புகளாக மாறி படர்ந்து விரிய உற்றதுணையாய் இருந்தார். ஆகவே தான் வாசுகி அம்மையார் புறதெய்வ வழிப்பாட்டை விடுத்து, தன்னை இந் தெய்வநிலைக்கு உயர்த்திய கணவனையே அன்பு தெய்வமாய் தொழுது கொண்டிருந்தாள். அதன் காரணம் அவ் அம்மையாரின் தெய்வ வாக்கிற்கு இயற்கையும் கட்டுப்பட்டது. இத்தன்மையுடைய மனையாள் “பெய் என்றால்தான் மழை பெய்யுமே தவிர”
இஃதின்றி தன்னுள் குடிகொண்டுள்ள தெய்வீகத்தையே அறியப்பெறாத
கணவன்மார்களால் எவ்வாறு தன்னை நம்பி வந்த மனையாளின் தெய்வத்தன்மையை வெளிக்கொணர இயலும் ? நல்லறமும், அன்பும் இன்றி நடக்கும் இத்தகைய இல்லறம் வெறும் பெயரளவில்தான் இருக்குமே தவிர அங்கு தெய்வீகம் மிளிராது. அதன் காரணம் உருவாகும் மனசஞ்சலங்களில் இருந்து தம்மை தற்காலிகமாக விடுவித்துக்கொள்ள இத்தன்மையுடைய மனையாள் எனப்படுபவர்கள்,
அகத்தினில் கிடைக்கப்பெறாத இத்தெய்வீகத்தை புற தெய்வ வழிபாடுகள் மூலம் அடைய முயன்று கொண்டே காலத்தை கழிப்பார்கள்…. என்பதாக பொருள் கொள்ளலாம்.
சாய்ராம்


