“Agre hAra, அக்ரஹாரம்”

 “அக்ரஹாரம் ஒரு பார்வை

“Agre hAra, அதாவது அக்ரஹாரம்என்னும் சொல்லில் அடங்கிய  உட்பொருளை பற்றி  இங்கு சற்று சிந்தித்து பார்க்கலாம்

Agre என்பது ஒரு சமஸ்கிருத சொல். இதற்கு  ஆதியில், அப்பால், மேலும் என்று பொருள்கள் உள்ளன. அது போன்று hAra என்பதும் ஒரு சமஸ்கிருதசொல். இதற்கு மாலை என்று பொருள் உள்ளது. எனவே Agre hAra என்பது நுனியும், முடிவும் இல்லாத ஒரு ஹாரம்  போன்ற மாலை என்று பொருள் கொள்ளலாம்.

 பிருஹதாரண்யக உபநிஷத்மூன்றாவது அத்தியாத்தில் ஒரு சம்பாஷனையாக  ரிஷி யாக்ஞவல்கியருக்கும், கார்க்கி அம்மையாருக்கும் நடந்த உரையாடல் ஒன்று விளக்கப்பட்டுள்ளது

1.எது வானத்திற்கும், பூமிக்கும், அதற்கு அப்பாலும்குறுக்கிலும் நெடுக்கிலும் வியாபித்துள்ளது ?

 –என்னும் கார்கி அம்மையாரின் கேள்விக்கு, ஆகாயம் கார்கிஎன்பது ரிஷியாக்ஞவல்கியரின்பதில்.

2. மீண்டும் ஆகாயம் எதில் கோர்க்கப்பட்டுள்ளது ?- என்னும் கார்கி அம்மையாரின் கேள்விக்கு,

கார்கி அதை அழிவற்ற அக்ஷரம் என்று பகர்வார்கள். இதில்தான் ஆகாயம் குறுக்கிலும்நெடுக்கிலும் கோர்க்கப்பட்டுள்ளதுஇந்த அக்ஷரத்தின்கட்டளையாலேயே சூரியனும் சந்திரனும் தம்தம்ஸ்தானங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.- என்பதுரிஷி யாக்ஞவல்கியரின்பதில். எனவே அழிவற்ற அக்ஷரம்  என்பது  Agre என்னும் நுனியும், முடிவும் இல்லாததாய் இருக்கிறது என்றும் பொருளாகிறது.

அது போன்று பகவத் கீதை: அத்தியாயம் 10: ஸ்லோகம்: 33ல் எழுத்துக்களுக்குள் நான் அகரம் என்று ஸ்ரீ கிருஷ்ணனும் சொல்லியுள்ளார்.

 “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

என்பது வள்ளுவர் பெருமானின் முதல் திருக்குறள். அகரம் என்னும் சப்தம், எல்லா எழுத்துக்களுக்கும்முன்பே, ஆதிபகவனுக்கும் முன்பே, உலகம்தோன்றுவதற்கும் முன்பே, இருந்துகொண்டிருக்கின்றது என்பது இதன் மெய்ப்பொருள்.

அது போன்று பைபிள்: யோவான்முதல் அதிகாரத்தில்,

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தைதேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தைதேவனாயிருந்தது என்று சொல்லப் பட்டுள்ளது. ஆக எல்லா சான்றோர்களுமே எல்லா வேதங்களுமே அகரம் என்னும் சப்தத்தை உள்ளடக்கிய வார்த்தையையே அழிவற்ற அக்ஷரம் என்று சொல்லியிருக்கிறாகள். மேலும் ரிஷியாக்ஞவல்கியர் இந்த அக்ஷரத்தை ஒருவன் அறியாமல் நூறு வருஷங்கள் யாகங்களும், ஹோமங்களும், புண்ணிய காரியங்களும் செய்தாலும் அதனால் ஒரு பலனும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 “அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது“. என்பதும் வள்ளுவர் பெருமானின் மற்றொரு திருக்குறள்.

அதாவது நுனியும், முடிவும் இல்லாத இந்த அகரம் என்னும் சப்தத்தை உள்ளடக்கிய அக்ஷரத்தை முறையாகஅறிந்து உணர்ந்து அறத்தின் அடிப்படையில் வாழும் இத்தகைய சான்றோர்களையே வள்ளுவர் பெருமான் அறவாழி அந்தணன் என்று இக்குறளில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய அறவாழி அந்தணர்கள் ஒரு ஹாரம் போன்று வசித்து வந்த இடமே Agre hAra, அக்ரஹாரம் என்ற பெயர் கொண்டதாய்விளங்கிற்று. ஒவ்வொரு அக்ரஹாரத்திலும் கீழ் பக்கம்சிவன் கோயிலும், மேல் பக்கம் விஷ்ணு கோயிலும்இருக்கும்.

மேலும் திருமூலர் தம் திருமந்திரத்தில் இவ்வாறு சொல்லியுள்ளார்,

 “காயத் திரியே கருதுசா வித்திரி

ஆய்தற் குவப்பர் மந்திரமாங்கு உன்னி

நேயுத் தேரேறி நினைவுற்று நேயத்தாய்

மாயத்துள் தோயாத மறையோர்கள் தாமேஎன்று, அதாவது 

காயம்என்பதற்குஉடம்புஎன்று பொருள்கொள்ளலாம். பஞ்ச பூதங்களின் திரிபேகாயம்எனும்உடலாக மாறியுள்ளது. ‘காயம்மீண்டும திரிந்தால்அவை பஞ்ச பூதங்களின் தன்மையாகவே இருக்கும். காயத்ரி தேவி என்று அழைக்கப்படும் சாவித்திரி, உருவமற்ற பெண் தன்மை கொண்ட  கடவுளின்   ஆற்றல்மிக்க சக்தி. அச்சக்தியை தியானிக்க இரண்டு மந்திரங்கள்சாவித்திரியோ உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவை பலா (சக்தி) மற்றும் அதிபலா 

( அதீத சக்தி) என்று அழைக்கப்படுகின்றன. இத்தகைய உருவமற்றசக்திமயமான மந்திரத்தை, ‘காயம்திரிந்துஇவ்வுடம்பை பஞ்ச பூதங்களின் திரிபு ஆக உணர்ந்தநிலையில்தான் ஜபிக்க இயலும். அவ்வாறு ஆராய்ந்துஅதன் பொருளை உணர்ந்து நாள் தோறும்இடைவிடாது அந்த மந்திரத்தை முறைப்படி தியானித்துவந்தால்….

சிவனருளால்அன்பே சிவமாய் அமர்ந்து வேதங்கள்சொல்லியபடியே வாழ்ந்து வருவார்கள். இத்தகையோரேஅந்தணர்என்னும் சொல்லுக்கும்  தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

மாறுகொண்ட ஹு வில் மடிந்ததே சிவயாமேஎன்பது சிவவாக்கிய சித்தரின் வாக்கு.

அதாவது திருமூலர் சொல்லியபடி காயம் என்னும் இவ்வுடம்பு திரிந்து பஞ்சபூதங்களில் திரிபு ஆகி, அந்நிலையில்  சாவித்திரி மந்திரத்தை உணர்ந்து இடைவிடாது ஜெபிக்கும் போது தான் சிவத்தின் அழிக்கும் தன்மையான ஹூ என்னும் சப்தம் மாறி, காக்கும் தன்மை கொண்ட மாறுகொண்ட ஹு என்னும் சப்தமாகி, அதாவதுசம்ஹார மூர்த்தியாகிய சிவன் காக்கும் விஷ்ணுவாகமாறி இவ் அக்ரஹாரத்தவர்களை காப்பதாக ஐதீகம்.

இது அகரம் என்னும் சப்தத்தை உள்ளடக்கிய அக்ஷரத்தை முறையாக அறிந்துகொண்டவர்கள் யாவர்க்கும் பொருந்தும். அதன் காரணம் Agre hAra என்னும் அக்ரஹாரம் என்பது அகரத்தை அறிய முற்படுபவர்களு ஒரு தேடல் திடலாக அந்த காலங்களில் இருந்து கொண்டிருந்தது.

ஆனால் அந்தோ! நாளடைவில் அக்ரஹாரம் என்னும் வார்த்தை ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே வசிக்கும் இடத்தை சுட்டிக்காட்டும் சொல்லாக மருவிப்போயிற்று. அடஅச்சாதியினராவது அகரத்தை உள்ளடக்கிய அஷ்ர பிரமத்தைஅறிந்தவர்களாக வாழ்கின்றார்களா என்றால், அவர்களும் உலகியல் வசதிகளை பெருக்கிக்கொள்ளும் பொருட்டு இடம் பெயர்ந்து போய்விட்டனர். காலப்போக்கில் அக்ரஹாரம் என்னும் சொல்லும் அதற்குரிய பொருளும் வழக்கத்தில் இல்லாமல் போய்விடும். அதன்பொருட்டு அறியப்படவேண்டிய அகரமாகிய அக்ஷரமும் அறிதர்க்கு அரியதாய்போய்விடும்.

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

Leave a comment