“உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு“.
அற்றே தவத்திற் குரு“.
தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள்.
“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்” என்பது வள்ளுவரின் மற்றொரு குறள்.
தன்னையே கொல்லுஞ் சினம்” என்பது வள்ளுவரின் மற்றொரு குறள்.
தன்னைத்தான் : தன்னுடையதாய் இருக்கும் உடம்பினை தானாகிய உயிர் காக்க விரும்பினால் சினம் காக்க. சினம் என்னும் அரக்ககுணம் ஒவ்வொருவர் உடம்பிலும் குடிகொன்டே இருக்கும். அச்சினம் பொங்கிவராமல் ஆற்றப்படவேண்டும். எவ்வாறு நெருப்பில் பொங்கிவரும் பாலை ஆற்ற குளிர்ந்த நீர் பயன்படுகின்றதோ, அவ்வாறே பொங்கிவரும் சினத்தை ஆற்ற பொறுமை என்னும் குணத்தை பயன்படுத்த வேண்டும். இத்தகைய ஆற்றும் திறன் கொண்டவருள் “ஆறுவது சினம்” என்னும் அவ்வையின் வாக்கிற்கேற்ப சினம் எப்போதும் ஆறியபடியே இருக்கும்.
இதுவே உற்றநோய் நோன்றல் என்பது. அவ்வாறு ஒருவர் இருப்பின் அப்பொறுமை என்னும் குணம் அவரையும் காத்து அதன்மூலம் மற்ற எல்லாவுயிர்க்கும் எத்தீங்கும் நிகழாவண்ணம் அதாவது உயிர்க்குறுகண் செய்யாதவாறு காக்கும். அதுவே அவர்களின் தவவாழ்க்கையாகயாகவும் அமைந்து விடுகிறது .
அவ்வாறு சினம் காக்கப்படாவிடின் சூழ்நிலையை காரணமாக்கி, சினமானது அவ்வுடலில் இருந்து வெளியேறத் தொடங்கும். நாளடைவில் அச்சினமானது உடன் இருந்தே கொல்லும் வியாதியாக மாறி அச்சினப்படுபவனையே கொன்றுவிடும்.
- அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
- ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்– வள்ளலார்
சாய்ராம்


