ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்”.
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால் ) எமனை வெல்லுதலும் கைகூடும் என்பது இக்குறளின் பொதுப்பொருள்.
எமனையே வெல்லக்கூடிய வகையில் தவம் என்று வள்ளுவர் எதனை குறிப்பிடுகிறார் ?
இந்த ஆலயத்தை இடிப்பேன்,மூன்றாம்நாள் எழுப்புவேன் என்று சொன்ன இயேசு கிறிஸ்து, தான் சொல்லியபடியே மூன்றாம்நாள் கல்லறையில் இருந்து மீண்டும் உயிர்த்தெயுந்து வந்தார். இயேசு கிறிஸ்து அப்பியாசித்த தவம் என்பது ?
கற்றது என்றும் சாகாத கல்வியென்று கண்டு கொண்டு உன் அற்புதச் சிற்றம்பலத்தில் அன்பு வைத்தேன் ஐயாவே .வ
ள்ளலார்
திருமூலரும் தம் திருமந்திரத்தில்
“உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே”.
அதாவது இப்பூவுலகில் எவர் ஒருவர் தம் தவவலிமையால்அவர்தம் ஊன் உடம்பை ஆலயமாகவும் , உள்ளே பெரும் கோயிலாகவும் மாற்றி தெள்ளத் தெளிந்த தகுதியில் தம் ஜீவனையே சிவலிங்கமாகவும் ஆக்கும் ஆற்றல் படைத்தவரோ அவரே கூற்றுவனையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவராவர். அவரின் ஐம்புலன்களும் மாணிக்கவிளக்காய் ஒளிரத்தொடுங்கும்.
இத்தகைய நோற்றலின் ஆற்றல் தலைப்படாதவற்கு….


