Thirukural For Self-improvement

 

 

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”.
வள்ளுவம் என்பது ஒரு குறிப்பிட்ட மொழிக்கோ, இனத்துக்கோ அல்லது ஒரு தேசத்துக்கோ சொல்லப்பட்ட குறள் அன்று.“யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்னும் தகுதியில் அந்தந்த காலக்கட்டத்தில். வாழ்ந்து கொண்டிருக்கும் மனித குலத்திற்காக சொல்லப்பட்ட உலகப்பொது மறை நூல். இதில் கூறியுள்ள 1330 குறட்பாக்களும் மெய்ப்பொருளே !
 எந்த ஒரு பொருளும் அதன் தன்மையுடன் இணைந்தே இருக்கும், அதாவது நெருப்பும் உஷ்ணமும் போன்று பாலும் அதன் வெண்மையும் போன்று.
 
எனினும் எப்பொருள் ஆயினும் அதன் தன்மை வெளிப்பட வேண்டுமெனில் அப்பொருளோடு மெய்யானது இணைந்து மெய்ப்பொருளாக மாற வேண்டும்.  மெய் என்னும் பதத்திற்கு ‘உண்மை, உடம்பு, உயிர், உணர்ச்சி’  என்று பல பொருள்கள் உள்ளன.
 
அதாவது நெருப்பு என்னும் பொருளுடன் மெய் என்னும் இவ்வுடம்பு இணையும் போதுதான், அதன் தன்மையான உஷ்ணம் உணர்ச்சியாக இவ்வுடம்பின் வழியாக அறியப்படுகிறது. அது போன்றே பாலுடன் இம்மெய் கலக்கும் போது தான் அதன் தன்மையான வெண்மை கண்கள் வழியே அறியப்படுகிறது.
 
அது போன்று  யார்யார் வாய் வழியாக எப்பொருள் பற்றிக் கேட்பினும், அப்பொருளானது கேட்பவர் ‘தம்மெய்யுடன்’ பொருந்தினால் தான் அதன் உண்மை தன்மை கண்டறியப்படும். அவ்வாறு கேட்பவர் ‘தம்மெய்யுடன்’ பொருந்தவில்லை எனில், அப்பொருள் எதுவாயினும் அது பொருளற்றதாக போய்விடும்.
“எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர்
அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி”
என்னும் அருட்பிரகாச வள்ளலாரின் அருடப்பாவிற்கேற்ப அவரவர் அறிவால் கண்டு, அறியப்பட வேண்டிய உலகப்பொதுமறை நூலாகும்.
வாழ்க வள்ளுவம்🙏 வாழ்க தமிழ்🙏

Leave a comment