You Are That!- “Preventer of death”

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்“.
நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும்
படியாகச் செய்யவேண்டும் என்பது இக்குறளின் பொதுப்பொருளாகும்.
மனித உடலில் 4448 நோய்கள்  வரக்கூடும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்இவற்றில் எந்த நோய்க்கு   அது வரும்முன் மருத்துவரை சென்று நாடுவது ?
நோய்நாடி:  மனிதனாக பிறப்பெடுத்த எத்தகையவரையும் நாடியே தீரும் நோய் மரணம் என்னும் நோயே ஆகும். எனவே மரணம் என்னும் நோயை அது நம்மை நாடி வரும் முன்னரே,

நோய்முதல் நாடி:
மரணம் என்னும் இந்நோய் நம்மை நாடி வரும் முன்பே அதன் தன்மையினை  அறிந்து கொள்ள,

அதுதணிக்கும் வாய்நாடி :

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்
என்பது வள்ளுவரின் மற்றறொரு குறளாகும். இப்பிறவி என்னும் பெருங்கடலை நீந்தக்கூடிய தகுதி கொண்டோரே, மரணம் என்னும்  இந்நோயையும் தணிக்கவல்லவர். அதாவது இந்நோய் நம்மை நாடிவரும் முன்னரே, அத்தகையோரை தேடி, நாடி இதன் தன்மைகளை அறிந்து, அதை தணிக்கும் மருந்தையும் வாய் மொழி உபதேசமாக நாடி அறியப்பெற்று, இந்நோய்  தாக்காவண்ணம் தணித்துக்கொள்க.


வாய்ப்பச் செயல்:வள்ளுவர்பிரான் இதனை அபூர்வச் செயல் என்றே குறிப்பிடுகிறார். ஏனெனில் இத்தேகத்தில் வேறு எந்நோய் ஏற்படினும் , அதனை தணிக்க தக்க மருத்துவரை நாடிச் சென்று  அந்நோயின் பிடியிலிருந்து தம்மை  விடுத்துக்கொள்ளலாம். ஆனால் மானுட தேகம் அனைத்திலும் குடிகொண்டிருக்கும் மரணம் என்னும் இந்நோயை அது தாக்கும் முன்பே நாடி அறிபவர்கள் வெகு சிலர். அவ்வாறு முன்பே நாடி கண்டறிந்த வெகு சிலருக்கும், அதனை தணிக்க வல்ல வாய்மையுள்ளவர்கள் (அருட்ப்ரகாச வள்ளலாரை போல) கிடைக்கப் பெறுதல் என்பது அரிதிலும் அரிதான செயலாய் உள்ளதால்


பொய்யாமொழி புலவர் இதனை ” வாய்ப்பச் செயல் என்றே வர்ணிக்கின்றார்


சாய்ராம்

Leave a comment