வாய்மையின் நல்ல பிற” அறத்துப்பால்:வாய்மை.
மரத்தில் மறைத்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைத்தது பார்முதல் பூதம்“
என்பது திருமந்திரசொல். இதன் விளக்கம்:
எவ்வாறு மரத்தினால் செய்யப்பட்ட பதுமையானது ஒளிகுறைவின் (அரையிருளில்) காரணம், மாமதயானையாகதோன்றுகிறதோ,
அவ்வாறே பரம்பொருள் சொரூபமாக “மானூடர் யாக்கைவடிவு சதாசிவம்” என இருக்கும் இம்மெய் (சத்தியம்) பார்முதல் பூதங்களாய் உள்ள நிலம், நீர்,காற்று,நெருப்பு, என்னும் பூதங்களால் மறைக்கப்பட்டு இம்மெய், பொய்யாக பொய்யுடம்பாக அழியும் உடம்பாக காணப்படுகிறது.
அரையிருள் விலகி, ஒளி ஒளிக்கின் மாமதயானையாக தோன்றிய காட்சிவிலகி அது மரப்பதுமையே என்னும் அறிவு ஊர்ஜிதப்படும். அதுபோல இவ்வுடம்பினுள் உருபொருளாய், உயிராய் இருக்கும் சிவனருள் கூடின் இது உடம்பே என்னும் அஞ்ஞானம் விலகி, இது மெய்யே (பரமே) என்னும் மெய்ஞானம் புலப்படும்.
.
வள்ளுவர் பெருமான் குறிப்பிடும் “யாம்” என்னும் சொல்லை ஒருமையை குறிக்கும் நான் “I” என்பதாக எடுத்துக்கொள்ளாமல், பன்மையை குறிக்கும் நாம் we என்றே பொருள் கொள்ளல்வேண்டும்.அ–வ்யக்த,(in·dis·tinct),வ்யக்த (dis·tinct) இவ்விரண்டும் வடமொழி சொற்க்களாகும்.
“அ–வ்யக்த“ என்பது தோற்றத்திற்கு அப்பாற்பட்டது.அது இவ்வுடம்பினுள்குடிகொண்டுள்ள உயிர் அல்லது ஆத்மசொரூபமாகும். “வ்யக்த“ என்பது தோற்றத்திற்கு உட்பட்டது. அதுவே இவ்வுடல் என்பதாகும்.
இக்குறளில் வள்ளுவர் குறிப்பிடும் “யாம்” என்னும் சொல் அ–வ்யக்த,வ்யக்த இவ்விரண்டும் இரண்டற கலந்த ஒரு பன்மைச்சொல்லாகும். இத்தகைய தகுதியில் யாம் தம் மெய்யை காண்கின், அதாவது உயிர் மெய்யாக, உயிர் மெய் எழுத்தாக ஆகின், அவ்வாறு கண்டவற்றுள் வாய்மை என்னும் சத்தியத்தை தவிர வேறு எதுவுமே தோன்றாது, என்னும் பொருள்பட நமக்கு எடுத்துரைக்கிறார்.
isha Upanishad says
“All who worship what is not real knowledge (dis•tinct), enter into blind darkness: those who delight in real knowledge, ,(in•dis•tinct), enter, as it were, into greater darkness.
One thing, they say, is obtained from real knowledge; another, they say, from what is not knowledge.
He who knows at the same time both knowledge and not-knowledge,
(அ–வ்யக்த,வ்யக்த) overcomes death through not-knowledge, and obtains immortality through knowledge”.
சாய்ராம்.


