“தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.” குறள்-111
பாற்பட்டு ஒழுகப் பெறின்.” குறள்-111
அருட்ப்ரகாச வள்ளலாரின் பாடல் (பாடல் எண் :4128)
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே.
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.

இதில் வள்ளுவர் கூறும் “தகுதி எனவொன்று” உள்ளது என்பதும் வள்ளலார்கூறும் “எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே” என்பதும்ஒன்றேயாகும்.
இக்குறளுக்கு பொது விளக்கம் :
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம்மட்டுமே வாழ்க்கைக்குப் போதும் என்பதாகும்.
ஆனால் இவர்கள்அனைவரையும் ஒன்றாய் பிரிவுபடாமல் நோக்ககூடிய, வள்ளுவர் குறிப்பிடும் தகுதியை அடையும் தகுதி !
வள்ளலார் சுட்டிகாண்பிக்கும் சிவத்தை அடையப்பெற்றவற்கே!! அச்சிவத்தை உணரப்பெற்றவர்களே
“அன்பே சிவமாய் அமர்திருந்தாரே” என்னும் திருமூலரின் திருமந்திரசொல்லுக்கேற்ப
அன்புருவாய் அமரஇயலும் !!!
“அன்பே சிவமாய் அமர்திருந்தாரே” என்னும் திருமூலரின் திருமந்திரசொல்லுக்கேற்ப
அன்புருவாய் அமரஇயலும் !!!
இத்தகையோருக்கே வள்ளுவர்கூறும் நடுவுநிலைமை என்னும் அறனானது, அதாவது உறவினில் உறவையோ அல்லது பகையினில் பகமையோ காணாத நடுவுநிலையென்னும் அறன் திறனாக வாய்க்கப்பெறும்.
சாய்ராம்