இடுக்கண் களைவதாம் நட்பு”.
நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு
என்பது இக்குறளின் பொதுப்பொருள்.
கீதைப் – அத்தியாயம் -6, தியானயோகம், சுலோகம் -(5)
ஒருவர் உடலில் இருந்து உடுக்கை நழுவும் பொழுது முதலில் அதனை உணர்வது அவரின் உணர்வே. அவ்வுணர்வே அவரின் கைகளை கண் இமைக்கும் நேரத்தில் செயல்பட வைத்து அவர்தம் மானத்தை காப்பாற்றுகிறது. தக்க சமயத்தில் அத்தகைய உணர்வு வெளிப்படாது போயின் அவமானத்திற்குள்ளாகா நேரிடும். இவ்விடத்தில் அவரின் உணர்வே நட்புக்கு இலக்கணமாக செயல்படுகிறது.
சிவம் போயின் இவ்வுடம்பு சவமே. இதுவே திருவள்ளுவர் குறிப்பிடும் இடுக்கண் என்பது. இத்தகைய “இடுக்கண் களையும்” திறனை படைத்தது இவ்வுடம்பினுள் குடிகொண்டுள்ள தூய உணர்வான சிவமே. அச்சிவத்தை ஒருவர் முறையாக அறிந்து, தம்முள் உணரப்பெற்று , அதனுடன் தானே தனக்கு நண்பனாக ஆகப் பெறின்…
இவ்வுடலில் இருந்து உயிர் நழுவும் தருணத்தில்“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே” அபயஹஸ்தமாக சிவஹஸ்தம் (pureself,தூய உணர்வு) கண் இமைக்கும் நேரத்தில் வெளிப்பட்டு இவ்வுடம்பினின்று இவ்வுயிர் நழுவாவண்ணம் காத்து, சவமாய் (சாம்பலாய்) போகாமல் சிவமயமாகவே ஆக்கிவிடும். மரணத்தை வென்ற மார்கண்டேயரைப் போல !
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க்கு ஏதும் ஏதமில்லையே”-
தேனைக்காவில் இன்மொழித் தேவி பாகமாயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க்கு ஏதும் ஏதமில்லையே”-


