பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”.
இருள்சேர்: இருளில் சேர்வது எது ?
ஒரு குழந்தை உருவாக காரணமாகும் ஆண் பெண் இருவரது சேர்கை நடப்பது இருளில்தான் இதுவே இருள்சேர் என்பது.
இருவினை: இருவினைகள் என்பது கர்மபலன் மற்றும் ஜென்மபலனை குறிப்பதாகும்.
இதில் கர்மபலன் என்பது அக்குழந்தை உருவாக காரணமாகும் தாய் தந்தை இவர்களின் கர்ம (எண்ணங்களின்) பலனை குறிப்பது. ஜென்மபலன் என்பது உருவாக வந்த அக்குழந்தையின் முன் ஜென்ம கர்மபலனை குறிப்பது.
“இன்றிபோக இருவினையும் கெடுத்து
ஒன்றியாக்கைபுகாமை உய்யக்கொள்வான்
நின்ற வேங்கடம் நீள்நிலத்துள்ளது
சென்று தேவர்கள் கைதொழுவார்களே”


