You Are That!-“penance makes the rain”

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.”


வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் பெருந்தகை இவ்வாறு கூறியுள்ளார். எது வான்சிறப்பு ?

வியன் எனும் பதத்திற்கு ஆகாசம் என்று பொருள். ஆகாசம் என்பது பஞ்ச பூதங்களில் ஒன்று. பஞ்ச பூதங்கள் வடிவாகவே இறைவன் இருப்பதாக ஐதீகம்.வள்ளுவர் தம் மற்றொரு குறளில் கூறியுள்ளது போல்
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு”.
என்னும் அருளுக்கு பாத்திரமான அருளார்களால்தான்அவ்வுலகம்அல்லதுவியன்உலகம்என்னும் இவ் ஆகாசம் நிரம்பப்பட்டுள்ளது. அவ்வுலகம் செல்லும் முன் இவ்வுலகில் இத்தகையோர் வாழும் வாழ்க்கையே பொருள் பொதிந்த வாழ்க்கையாக அதாவது “ஈதல்என்னும் தானமும் , “இசைபட வாழும்தவமும் கூடிய வாழ்க்கையாகயும், அதுவே குருவருளாகவும், இறையருளாகவும் அமைகிறது. இவர்களே
தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை.
என்று ஔவையார் கூறும் நல்லார் எனப்படுபவர்கள்.

இத்தகைய தானம் தவம்இரண்டும்அந்தந்த காலக்கட்டத்தில் தங்காவிடின் வியன் உலகத்தவர்களால் வானமும் தன் பங்கிற்கு வழங்காமல் போய்விடும். எனவே வானத்தையே சிறப்பிக்க கூடிய ஆற்றல் மனிதகுலத்திற்கு மட்டுமே உள்ளது என்னும் பொருள்பட வள்ளுவர்பெருமான் முடிக்கிறார்.
சாய்ராம்

Leave a comment