“கிட்டாதாயின் வெட்டன மற”

“கிட்டாதாயின் வெட்டன மற”

“பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்

பற்றி விடாஅ தவர்க்கு”.

திருவள்ளுவர் எப்பற்றினை பற்றி, விடாமல் போயின் இடும்பைகள் என்னும் துன்பம் பற்றி விடாது என்று எச்சரிக்கிறார்?
வள்ளுவர் கூறும் பற்று என்பது ஒருவர் ஒரு பொருளின் மீது கொள்ளும் பற்று அன்று ! மாறாக பற்று கொண்ட அப்பொருள் தமக்கு கிட்டாவிடினும், அதன் மீது கொண்ட மோகத்தினின்று விடுபடமுடியாமல் தவிக்கும் பேராசை என்னும் குணப்பற்றையே !
ஒருவர் இப்பற்றை, பேராசை என்னும் குணப்பற்றினை விடாத வரை, அவரை பற்றிக்கொண்ட இடும்பைகள் என்னும் துன்பம் உடும்பை போல் பற்றிக்கொண்டு நிம்மதி,சந்தோஷம் என்னும் இவ்விரண்டையும் அவரிடத்தில் அண்டவிடாது செய்துவிடும்.மேலும் இக்கருத்தை வலியுறுத்தியே…
அவ்வை பிராட்டியும் தன் ஆத்திச்சுடியில் “கிட்டாதாயின் வெட்டன மற”

என்று நமக்கு எடுத்துரைக்கிறார். அதாவது ஒரு மரத்தின் கிளைகளை மட்டும் வெட்டினால் அது வெட்ட வெட்ட மீண்டும் மீண்டும் துளிர் விட்டு வளர்ந்து கொண்டே இருக்கும். மாறாக கிட்டாதாயின் அடிவேரோடு வெட்டப்படின்,பேராசை என்னும் துளிர், மீண்டும் வளரவே வளராது என்னும் பொருளோடு வள்ளுவரின் குறளை மெய் பொருளாக்கியுள்ளார்.

சாய்ராம்

Leave a comment