க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்: அத்தியாயம்-13
(1) குந்தி புத்திரா, இவ்வுடலம் க்ஷேத்திரம் எனப்ப்டுகிறது. இதை அறிகிறவனை க்ஷேத்ரக்ஞன் என்று ஞானிகள் பகர்கிறார்கள்.
(2) அர்ஜுனா, க்ஷேத்ரங்களனைத்திலும் என்னை க்ஷேத்ரக்ஞன் என்று அறிக..க்ஷேத்திரம் க்ஷேத்ரக்ஞன் பற்றிய அறிவே ஞானம் என்பது என் கொள்கை.
(13)அது எங்கும் கைகால்களை உடையது, எங்கும் கண், தலை, வாய்களையுடையது, எங்கும் காதுகளை உடையது, உலகில் அனைத்தையும் அது வியாபித்துள்ளது.
என இவ்வாறாக உபதேசிக்கிறார்.
இத்தகைய க்ஷேத்ரக்ஞன் என்னும் வாலறிவன் மூலம் கற்ற கல்வியின் சிறந்த பயனை ஒருவர் அடைய விரும்பின், வாலறிவனின் நற்றாள் தொழுதல் வேண்டும். நற்றாள் தொழுதல் என்பது வாலறிவனுக்கு பணிவிடை செய்ய அல்லது செய்ய மறுக்க உரிமையற்றவராய்
“பணியில் பணிமின்” என்பதாய் இருத்தலே. அவ்வாறு இன்றி அஹங்ஹாரத்தால்…
“போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது”


