You Are That!- “family saint”

“இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
”.
அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான் என்பது இக்குறளின் பொதுப்பொருள்.

“அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பவன், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என்பதை என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாயிருக்கை நன்று!”என்பது பகவான் ரமண மகரிஷியின் அருள்வாக்கு.

அவ்வாறாயின் எல்லாம் முன்பே நிர்ணயக்கப்பட்டதாயின், முயல்பவர்களின் முயற்சி எதைக்குறித்து ?

அவரவர்களின் வீடு பேற்றினை அல்லது முக்தியை குறித்தே !

இம் முக்தியை அடைய முயல்பவர்கள் கையாளும் வழிகள் பலப்பல.

சிலர் துறவறம் பூண்டு காட்டிற்கு சென்று கடும்தவம் புரிவர்,

சிலர் மூச்சினை அடக்கி குண்டலினி சக்தியை எழுப்ப முயல்வர்,

சிலர் மந்திரப் பிரயோகம் செய்து அதன் மூலம் அடைய முயல்வர்,

சிலர் வேள்விகள், யாகங்கள் செய்து அடைய முயல்வர்,

சிலர் புலனடக்கம் பயின்று அதன் மூலம் அடைய முயல்வர்,

ஆனால் முயலும் இவ்வனைத்து முயல்பவர்களைக் காட்டிலும். எம் முயற்ச்சியும் இன்றி இயல்பாக…

தாம் மேற்கொண்டுள்ள இல்லறத்தை நல்லறமாக, அதாவது “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” என்னும் வள்ளுவர் கூற்றின்படி நடத்திக்கொண்டு செல்பவர்கள்….

வீடு பேற்றினை அடைய முயற்ச்சிக்கும் இம்-முயல்பவர்களைக் காட்டிலும் தலை சிறந்தவராக கருதப்படுவார்கள் என்னும் பொருள்பட வள்ளுவர் இக்குறளை நமக்கு அருளியுள்ளார்.

சாய்ராம்

Leave a comment