You Are That!- “courageous with love”

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது என்பது இக்குறளின் பொதுப்பொருள்.
பொதுவாக வீரம் எனப்படுவது தம்மை தாக்க வருபவர்களைகண்டு அஞ்சாமல் எதிர்த்து, தம்வீரத்தை வெளிப்படுத்தி வெற்றி கொள்வதேயாகும். எதிர்ப்பவர்களின் உயிரைப்பறிக்கக்கூட தயங்காத அத்தருணத்தில் அன்பு எவ்வாறு துணையாகும் ?
கம்பராமாயணம்:
ஆள்ஐயா! உனக்குஅமைந்தனமாருதம்அறைந்த
பூளைஆயினகண்டனை; இன்றுபோய், போர்க்கு
நாளைவாஎனநல்கினன்நாகுஇளங்கமுகின்
வாளைதாவுறுகோசலநாடுடைவள்ளல்.
யுத்தத்தில் நிராயுதபாணியாகநிற்கிறான் இராவணன்.வீரத்தை வெளிப்படுத்தும் தருணம் அது. இராமன் நினைத்திருந்தால் அவனை கொன்றிருக்கலாம். விண்ணுலகத்தவரும், மண்ணுலகத்தவரும் இராவணன் முடிவை எதிர்நோக்கியிருந்த தருணம் அது. இருப்பினும் அவ்வாறு செய்யாமல் அவனுக்கு அறிவுரை சொல்கிறான் இராமன்
அறத்தின் துணை இன்றிவெறும் படைபலத்தால் யாரும் வெல்லமுடியாது என்றுபலப்பலஅறிவுரைகள்கூறுகிறான். கடைசியில், “இதை எல்லாம் நீ கேட்கவில்லை என்றால், இன்றுபோய்போருக்குநாளைவாஎன்றான்
இங்குதான்இராமனின்பண்புவிளங்குகின்றது. “ஒன்று சென்று மனம் திருந்தி சரணடை அல்லது போருக்கு நாளைவாஎன்று சொல்லிய சொல்லின் செல்வன் இராமனின் அறம் மட்டுமின்றி, மறத்திற்கு பின்பும் பகைவனிடமும் கருணைகாட்டும் அன்பு துணை நிற்பதை காணலாம்.
அதாவது அறவழியில் நடப்பவர்களின் மறத்திற்கு மட்டுமே
 (இராமனைபோல்அன்பு துணை நின்று அவரது பண்பினை உலகறியச்செய்யும்.மாறாக அறவழியை மறந்த, மறத்திற்கு (இராவணனை போல்) அன்பு ஒரு போதும் துணைநிற்காது. அதன் காரணம் வெளிப்படும் பண்பற்ற முரட்டுசுபாவம் அவர்களையே அழித்துவிடும் என்னும்
பொருள்படவே வள்ளுவர் இக்குறளை நமக்கு வழங்கியுள்ளார்.

சாய்ராம்

Leave a comment