You Are That!- “lights up the house”

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”.


இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் 
தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள் என்பது  இக்குறளின் பொதுப்பொருள்.

மனைவி என்னும் சொல்லுக்கு மனையை (வீட்டை) விளங்க வைக்க வந்தவள் என்று பொருள். விளங்க வைத்தல் என்பதிற்கு பிரகாசிக்க வைத்தல் என்று பொருள். அதாவது ஒரு பெண் மனையாளாக ஒரு வீட்டிற்கு வந்தபின்பு அந்த வீட்டின் சுபிட்சம் முன்பிருந்ததை விட பன்மடங்கு பெருகி, ஒளிமயமாய் பிரகாசிக்க வேண்டும்.
அதாவது ஒருவள் தாம் மனையாளாக புகுந்த அம்மனையில் உள்ள 
தற் கொண்டான் : தன் கணவனிடம் குடிகொண்டுள்ள தனித்த சிறப்பியல்புகளை அறியப்பெற்று, அதனை ஊக்குவித்து, செயலாக்கி, அதன்மூலம் தாம் புகுந்த மனையின் பொருள் வளத்தையும் பன்மடங்கு பெருக்கி
மேலும் தாம் புகுந்த மனையில் உள்ள மற்றவர்களின் குண நலன்களையும் அறிந்து அதற்கு தக்கவாறு தம்மை மாற்றிக்கொண்டு, மாண்புடையவளாக, புகுந்த வீட்டை ஒளிமயமாய் பிரகாசிக்கச் செய்பவளே சிறந்த வாழ்க்கைத்துணை ஆவாள் என்று பொருள் கொள்ளுதல் சாலச் சிறந்தது.
Sairam

Leave a comment