“மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”
குறள் 134: ஒழுக்கமுடைமை
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்”
குறள் 134: ஒழுக்கமுடைமை
பொதுப்பொருள்:
“பார்ப்பான்” தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான் என்பதாகும்.
மெய்ப்பொருள்:
திருக்குறள் ஒரு உலகப்பொது மறைநூல். இவ்வுலகில் வாழுகின்ற அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு மெய் பொருள் நூல். அவ்வாராயீன் “பார்ப்பான்” என்னும் ஒரு குலத்திற்கு மட்டும் சொன்னதாக இக்குறளை எடுத்துக்கொள்ளலாகாது.
பார்ப்பான்: என்பதிற்கு ‘பிராமணன்’ என்று பொருள் உள்ளது.
பிராமணன் என்பதை வெறும் ஒரு குலத்தை குறிக்கும் சொல் என்று பொருள் கொள்வதை விட, பிராமணன் என்பதற்கு ப்ரஹ்ம ஞானத்தை அல்லது மெய்ஞானத்தை அறிந்தவன் என்று பொருள் கொள்வது சாலச் சிறந்ததாகும். அதாவது இம் மெய்ஞானத்தை (ப்ரஹ்ம ஞானத்தை) அடைந்தவர்கள் யாராயினும் அவர்கள் ‘பார்ப்பான்’ என்னும் பிராமணர்களேயாகும்.
இத்தகைய மெய்ஞானக் கல்வியை குருகுலம் வழியாக பயின்ற ஒருவன் ‘காலத்தின் மாறுபாட்டால்’ தான் கற்ற இந் மெய்ஞானக் கல்வியை மறக்கும் சூழ்நிலை ஏற்படினும் ஒத்துக்கொள்ளலாம், ஆனால் அக் கல்வியை வழங்கிய அக்குருகுலத்திற்கு ஏற்ற மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால், அக்குலத்தின் தீராத சாபத்திற்குள்ளாகி மாறாத அழிவை நோக்கியே செல்வான் என்று வள்ளுவர் நமக்கு எச்சரிக்கிறார்.
மேலும் இம் மெய்ஞானக் கல்வியை காட்டிலும் உத்தமனாய் இருப்பதே மேல் என்னும் இக்கருத்தை வலியுறுத்தி அவ்வை பிராட்டியும் தன் ஆத்திச்சூடியில் “உத்தமானாய் இரு” என்று கூறியுள்ளார்.
மேலும் இம் மெய்ஞானக் கல்வியை காட்டிலும் உத்தமனாய் இருப்பதே மேல் என்னும் இக்கருத்தை வலியுறுத்தி அவ்வை பிராட்டியும் தன் ஆத்திச்சூடியில் “உத்தமானாய் இரு” என்று கூறியுள்ளார்.
சாய்ராம்


