“இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்“.
இடும்பை படாஅ தவர்“.
ஒருவர் தனக்கு கிடைக்கப்பட்டது எதுவாயினும்அது இறைவனால் அருளப்பட்டதே என்னும் மனப்பாங்கோடு வாழ்வாராயின் அவருக்கு எத்தகைய துன்பமான சூழ்நிலைகள்உருவாயினும்…..
உதாரணமாக அவர்வறுமை என்னும் கொடிய நோயினால் தாக்கப்பட்டாலும் எதையும்மகிழ்வுடனே ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு கொண்டுள்ளமையால் அச்சூழலிலும் திருப்தியுடனேவாழ்வர். இத்தகையோரினால் வறுமை வறுமையுற்று துன்பப்படும்.அதாவது வறுமை என்னும் சொல்லே அவர்களது அகராதியில் இல்லாமல் போய்விடும்.
குறிப்பாக இப்படிப்பட்டவர்கள் தாழ்வு மற்றும் உயர்வு மனப்பான்மை அற்றவராய்த்தான் இருப்பர்.ஏனினில் இவர்களது வறுமை நீங்கி செல்வம்வரினும் மனப்பாங்கில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே திருப்தியுடனே வாழ்வர்.
சாய்ராம்


