“ஒருவர் பொறை இருவர் நட்பு”
“முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்”.
முகத்தால் விரும்பி– இனிமையுடன் நோக்கி– உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள்.
பரஸ்பரம் அன்பு பரிமாறிக்கொள்ளும் இருவரில்,ஒருவர் தன் அன்புக்கு பாத்திரமானவரின் முகத்தை தம் அகத்துனுள் அமர்த்தி, ஒரு முகப்பட்ட உள்ளத்துடன் இனிமையாக அம்முகத்தை நோக்கி, தம் எண்ணங்களால் வெளிப்படுத்தும் இன் சொல்லானது…
அத்தகைய அன்பிற்க்குரியவர் எத்துனை வெகு தூரத்தில், கடல் கடந்து இருந்தாலும் அவர் உள்ளத்திலும் அந்த இன் சொல்லானது அக்கணமே நிச்சியம் எதிரொலிக்கும். அவ்வாறே இவ் இன்சொல்லின் உணர்வினை அறியப் பெற்றவரிடமிருந்தும் இவ் எதிரொலியின் பிரதிபலிப்பானது ஏதோ ஒரு வகையில் உடனடியாக “ஒருவர் பொறை இருவர் நட்பு” என்னும் பழமொழிக்கேற்ப வெளிப்படுத்தப்படும். இதுவே உண்மையான அன்பு கலந்த இன்சொல்லுக்குரிய அறத்தன்மையாகும்.
சாய்ராம்


