You Are That!- “having no expectations”

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு”.
இக் குறளில் மேலோட்டமாக பார்த்தால் வானம் பொழியும் மாரிக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யமுடியும் என்னும் பொருளாக 
தோன்றும்.
அவ்வாறெனின்,
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
என்று அவ்வையாரின் மூதுரை இவ்வாறு
கூறுவானேன் ?





இதிலிருந்து இப்பூவுலகில் மானுடப்பிறப்பு எடுத்த அனைவருடைய கடமையும் (கடப்பாடு என்னும் பததிற்க்கு கடமை என்று பொருள்) நல்லாராய் என் கடன் பணி செய்து கிடப்பதேஎன்னும் தேவாரத் திருவாக்கின் படி, ஆதாயத்தை நாடாமல் அதை கிடப்பினில் போட்டு,தமக்கென விதிக்கப்பட்ட கடமை எது என்பதினை உணர்ந்து, அப்பணியினை கடன் பட்ட ரீதியில் செயலாற்றுவதேயாகும்.
கடன் பட்ட ரீதியில் என்பதிற்கு அப்பணியினை செய்ய நாம் முன்பே கடன் பட்டுள்ளோம். ஆகவே அப் பணியினை ஆதாயம் நாடாது நிறைவு செய்து, கர்ம பலன் என்னும் கடனிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்வதே !
இவ்வாறு வாழும் நல்லோரின் எல்லாச்செயல்களுமே கைமாறு கருதா அதாவது ஆதாயம் நாடாத,செயல்களாகத்தான் இருக்கும். இவர்கள் பொருட்டுதான் வானமும் தன் பங்கிற்கு கைம்மாறு ஏதும் கருதாமல் அவ்வையின் வாக்குப்படி எல்லார்க்கும் மழையை பொழிகிறது என்பதாக பொருள் கொள்ளலாம்.

சாய்ராம்

Leave a comment