“அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்”
அஃதறி கல்லா தவர்”
அறிவுடையோர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார், அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர் என்பது இக்குறளின் பொதுப் பொருள்.
“ஆவ தறிவார்” என்னும் பதத்திற்கு எந்த ஒரு செயல்பாடு ஆகியே தீருமோ, எக்காலத்தும் எவராலும் மாற்ற இயலாத ஒன்றாய் உள்ளது அதுவேயாகும்!
அத்தகைய செயல் என்பது மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் சென்றடைய வேண்டிய இறப்பு என்னும் நியதியே ஆகும். அறிவுடையார் இவ் நியதி ஆகியே தீரும் என்பதை அறிந்து, அது
“இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று என்று வருமோ அறியேன் என் கோவே” என்று அருட்ப்ரகாச வள்ளலார் அருளியபடி, இன் நியதியினை அறிந்து,உணர்ந்து எப்பொழுதும் தம் முடிவை எதிர்நோக்கியே வாழ்வர். ஆதலின் அவர்களது உள்ளத்தில் எப்பொழுதும் தர்ம சிந்தனை குடிகொண்டிருக்கும். அவர்களது செயல்பாடுகள் அனைத்தும் தர்மத்திற்கு உட்பட்டே இருக்கும்.
ஆனால் அறிவிலார் அஃதறிகல்லாது,அதாவது அத்தகைய நியதி என்று ஒன்று உண்டு,அது(இறப்பு) நிச்சியம் ஒரு நாள் நாம் அறியாமலேயே நம்மை வந்தடையும் என்பதை அறியாமலேயே வாழ்வர். ஆதலின் இயல்பாகவே இவர்களது எண்ணங்களும், செயல்பாடுகளும் எப்பொழுதும் தர்மத்திற்கு முரணாகவே இருக்கும்.
சாய்ராம்


