You Are That!- “glorifier”

“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்”.

ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர் என்பது இக்குறளின் பொதுப் பொருள்.
வள்ளுவர் இங்கு தினைத்துணை உதவி என்றில்லாமல் தினைத்துணை நன்றி என்றே குறிப்பிடுகிறார். மேலும் இங்கு உவமானப் பொருளாக பனையினை சுட்டிக்காண்பிப்பதின் மூலம் இன் நன்றி செய்யக் காரணமான உதவியானது பனையளவு பெரிது என்பதும் பொருளாகின்றது.
பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே இயற்கையாக வளர்ந்து மனிதனுக்கு வேண்டிய பல பயன்களை கொடுக்கும் ஒரு இயற்கை வளம். அது போல…
பனைத்துணையளவு உதவி செய்பவரின் செயலும் எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி, இயல்பாகவே ஆற்றக்கூடிய தன்மை கொண்டதாகவே இருக்கும்.அதாவது…
பெற்றோர்களாய் உள்ளவர்கள் தாம் பெற்றெடுத்த பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதிர்க்கு எடுத்துக்கொள்ளும் சிரமங்கள்,
அது போல ஒரு குருகுலத்தில் உள்ள குருவானவர் தம்மிடம் கல்வி பயிலவந்த மாணாக்கர்களை ஒரு சிறந்த கல்விமானாக மாற்ற எடுத்துக்கொள்ளும் முயற்சிகள்,
இவையே பனையினை ஒத்த இயல்பான ஈடே செய்ய முடியாத உதவிகள். ஆயினும் ஈடற்ற இவ்வுதவிகள் மூலம் ஒரு உன்னதமான நிலையினை அடையப்பெற்றவர் வெளிப்படுத்தும் நன்றியானது தினையளவே இருப்பினும்,

மாதா,பிதா, குரு என்னும் தன்மைக்குரியவர்கள் தம் முயற்ச்சிகள்

தம் கண் முன்பே பலனளிப்பதை கண்கூடாக கண்டு மகிழ்வுற்று அந்நன்றியினை பனைத்துணையாக் கொள்வர்

சாய்ராம்

Leave a comment