You Are That!- “The unborn soul”

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்”.

பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான்
அந்த நிலை நமக்கு உண்டாகும் என்பது இக்குறளின் பொதுப்பொருள்.

மனிதனாக ஒருவர் பிறப்பெடுத்த பின் மீண்டும் பிறவாமை விரும்பின்,இறவாமை என்னும் நிலையை அடையப் பெற்றால்தான் பிறவாமை கிட்டும்.

அவ்வாறாயின் வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை” என்பதிற்கு மாறாக வேண்டுங்கால் வேண்டும் மரணமில்லாப் பெருவாழ்வு” என்றுதானே குறட்பா இருக்க வேண்டும் ?

கீதைப் அத்தியாயம் –2 ஸாங்கிய யோகம்
இவ்வாத்மா ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. இது இல்லாதிருந்து பிறகு பிறந்ததன்று( இருந்து பிறகு இறந்து போவதன்று) இது பிறவாதது, இறவாதது, தேயாதது, வளராதது.காயம் கொல்லப்படுமிடத்து ஆத்மா கொல்லப் படுவது இல்லை.- சுலோகம்-20

வள்ளுவர் குறிப்பிடும் பிறவாமை என்பதும், பிறப்பே இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத இவ்வாத்மாவையே ! விருப்பிய பொழுது இந்நிலை வரவேண்டுமெனில், இவ்வாத்மா முதலில் அறியப்படவேண்டும் அவ்வாறு அறியப்பட்டால், இவ்வாத்மா இத் தேகத்தில் குடிகொண்டிருக்கும் போதே பிறவாமை என்னும் பேற்றை அடையப் பெற்றவராவர்.

எடுத்துக்காட்டாக : சத்குரு ஸ்ரீ ஷ்ரிடி சாய்பாபாவிடம் அவருடைய வயதைப் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த விடை லக்ஷக்கணக்கான வருடங்கள் என்பதாகும்”.

இவ்வாறே பகவான் ஸ்ரீ ரமணரும் அவருடைய பிறந்த நாள் என்று ? என கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த விடை நான் எப்பொழுது பிறந்தேன் என்பது எனக்கே தெரியாதுஎன்பதாகும்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்னும் வள்ளுவரின் குறட்பாவிர்க்கேற்ப, நினைத்த மாத்திரத்தில் பிறவாமை என்னும் பேற்றினை அடையப் பெறும் இத்தகைய சான்றோர்களுக்கு இப்பூவுலகில் மற்றைய விரும்பப்படுவைகள் என்று எதுவுமே இல்லையாயினும், வேண்டாமை என்னும் இவை அனைத்தும் விதவிதமான மனித ரூபங்களுடன் இத்தகைய சான்றோர்கள் முன்பு வேண்டி நிற்கும்.

 சாய்ராம்

Leave a comment